Author Topic: தடுமாறும் கோடு....  (Read 621 times)

Offline Anu

தடுமாறும் கோடு....
« on: September 10, 2012, 07:16:41 AM »

இடதில் நீ வலதில் நான்
ஆளுக்கொன்றென இணையாய்
வரைந்தோம் இரு கோடுகள்...

இணையாய் இருந்தும்
இணையாத கோடுகளாய்
நானும் நீயும்....

எங்கோ நீ இருந்தாலும்
இடதுபக்க கோடு கிடக்கிறது
இணையாய் அழிபடாமல்

அழிக்கமனமில்லை, ஆதலால்
வலது கோட்டினை மட்டும்
வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்

எல்லோரும் என்
முதுகு தட்டுகிறார்கள்
நீளமாய், நளினமாய் இருப்பதாய்

எனக்கு மட்டும்தானே தெரியும்
நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்
கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது...


Offline Global Angel

Re: தடுமாறும் கோடு....
« Reply #1 on: September 10, 2012, 01:31:03 PM »
Quote
இடதில் நீ வலதில் நான்
ஆளுக்கொன்றென இணையாய்
வரைந்தோம் இரு கோடுகள்...

இணையாய் இருந்தும்
இணையாத கோடுகளாய்
நானும் நீயும்....

எங்கோ நீ இருந்தாலும்
இடதுபக்க கோடு கிடக்கிறது
இணையாய் அழிபடாமல்

அழிக்கமனமில்லை, ஆதலால்
வலது கோட்டினை மட்டும்
வளைத்து நீட்டித்துக் கொள்கிறேன்

எல்லோரும் என்
முதுகு தட்டுகிறார்கள்
நீளமாய், நளினமாய் இருப்பதாய்

எனக்கு மட்டும்தானே தெரியும்
நீட்டித்த புள்ளியில் முடிச்சாய்
கோடு கொஞ்சம் தடுமாறியிருப்பது...




அனும்மா .. மிகவும் அருமையான பதிவு ... மனதை உருக்கும் பதிவு ...
                    

Offline Anu

Re: தடுமாறும் கோடு....
« Reply #2 on: September 10, 2012, 01:40:04 PM »
nandri rose dear