Author Topic: வயசானாலும் அழகாக மின்ன சில ஆயில் ட்ரீட்மெண்ட் இருக்கு...  (Read 722 times)

Offline kanmani

கடுகு எண்ணெய் - இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், தளர்வாக மார்பகங்கள் மற்றும் பெல்லியை சற்று பிட்டாக மாற்றும். மேலும் இந்த எண்ணெயில் மசாஜ் செய்யும் போது, லேசாக சூடேற்றி, பின் அதனை கைகளில் ஊற்றி, இரண்டு மார்பகங்கள் மீதும் சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தளர்வாக இருக்கும் மார்பகங்கள் சற்று பிட்டாக இருக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்கள் என்றால் தினமும் இவ்வாறு செய்வது நல்லது.

திராட்சை எண்ணெய் - இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோட, ஏதேனும் தளும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்துவிடும். முகம் நன்கு பொலிவோடு, எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்திற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால், முகச்சுருக்கங்கள் நீங்கும்.

அவோகேடோ எண்ணெய் - நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவோகேடோ எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்துவிடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து, முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கிவிடும்.

நல்லெண்ணெய் - உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் இந்த எண்ணெய் சருமத்தினை உறுதியாக்கி, பருக்கள் மற்றும் பிம்பிள்களை நீக்கிவிடும்.

ஆலிவ் எண்ணெய் - எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இது ஒரு அதிசய எண்ணெய் என்றும் கூறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எந்த காரணத்தைட்க கொண்டும் சூடேற்ற வேண்டாம். அவ்வாறு சூடேற்றினால், அதில் உளள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

எனவே சருமம் சற்று தளர்ந்து போல் இருந்தால், மேற்கூறிய எண்ணெய்களில் எவற்றைப் பயன்படுத்துவது என்று நீங்களே தேர்ந்தெடுத்து பயன்படுத்தி, பட்டுப் போன்று மின்னுங்கள்.