Author Topic: ஈஸியான... பிசிபேளா பாத்  (Read 856 times)

Offline kanmani

ஈஸியான... பிசிபேளா பாத்
« on: September 07, 2012, 04:11:56 PM »
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
புளி - சிறிய உருண்டை
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 4 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

காய்ந்த மிளகாய் - 6
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, கழுவிய அரிசி, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும்.

பின் அரைப்பதற்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.

பின் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து நன்கு வதக்கி, அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.

பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

பின்னர் சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அந்த குழம்பு கலவையை ஊற்றி, சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறி, பின்னர் பரிமாறவும்.

இப்போது சுவையான பிசிபேளா பாத் ரெடி!!!