Author Topic: வெஜிடேபிள் கட்லட்  (Read 832 times)

Offline kanmani

வெஜிடேபிள் கட்லட்
« on: September 07, 2012, 04:11:10 PM »
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1
முட்டை - 1
கார்ன் பவுடர் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கட்டு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் லேசாக அடித்துக் கொண்டு, பின் தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை நன்கு மசித்துக் கொள்ளவும். பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் போடவும்.

பின்னர் அதில் லேசாக அடித்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டை, கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதனை சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, அந்த தட்டி வைத்துள்ள கலவையை முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜிடேபிள் கட்லட் ரெடி!!!