Author Topic: கடவுள் கண் மறைந்து போனார்  (Read 755 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
கடவுள்
கண் மறைந்து போனார்

அசைவற்றுப் போயின
மதங்கள்

இல்லாத கடவுளுக்கு
இனி எதற்கு மதம்
முழங்க துவங்கின
நாத்தீக மேடைகள்

சற்று முன்கிடைத்த தகவல்
விளம்பரங்கள் கீழே
ஓடவிட்டன சில
தொலைக்காட்சிகள்

சூடான செய்திகளாய்
நெற்றி விளித்தன செய்திதாள்கள்..

'போலி சாமியார்களிடம்
போலிசார் விசாரனை'
'நாத்தீர்கள் மீதும்
புலனாய்வு பார்வை'
தலைப்பு செய்திகளாய் தெறித்தன
செய்தி அலைவரிசைகளில்..

கடவுளை கடத்தினவர்கள்
கடுமையாய் தண்டிக்கப்படுவர்
அரசியல் அரங்கங்கள்
அறிக்கைகளால் அதிர்ந்தன..

சர்வ மதப் பிராத்தனை
சர்வமும் நடந்தது
கடவுளுக்கு எதுவுமாகிவிடக்
கூடாதென..

கருவறையின் பின்புற‌த்தே
கண்ணுறாதபடி கிடந்தது
ஒரு கடிதம்..

நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்
நான் அற்ற இடத்திலெலாம்
எனைத் தேடி
நான் அற்றவற்றை
நீவீர் செய்வது பொறுக்காமல்
நான் அற்றுப் போகிறேன்
யாரும் எனைத்தேட வேண்டாம்
கடவுள்..

அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: கடவுள் கண் மறைந்து போனார்
« Reply #1 on: September 06, 2012, 11:45:08 PM »


ஆமாம் கடவுள் பெயரை சொல்லி எவளவோ அநீதிகள் செய்கின்றார்கள் ... அதை எல்லாம் தவிர்த்தாலே ... கடவுள் வாழ்ந்துட்டு போவார் எல்லார் மனதிலும் நல்ல கவிதை ஆதி
                    

Offline Anu

Re: கடவுள் கண் மறைந்து போனார்
« Reply #2 on: September 07, 2012, 06:47:01 AM »



இல்லாத கடவுளுக்கு
இனி எதற்கு மதம்

நான் அற்றவர்களில்
நான் இருக்கிறேன்
நான் அற்ற மனதிலும்
நான் இருக்கிறேன்
நான் அற்ற இடத்திலெலாம்
எனைத் தேடி
நான் அற்றவற்றை
நீவீர் செய்வது பொறுக்காமல்
நான் அற்றுப் போகிறேன்
யாரும் எனைத்தேட வேண்டாம்
கடவுள்..

superb aadhi ..
unmaiya appaattama solra varigal..
indha varigal enaku romba romba pidichi iruku..
very niceee...
thanks for sharing with us.


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: கடவுள் கண் மறைந்து போனார்
« Reply #3 on: September 14, 2012, 11:41:25 AM »
நன்றிங்க‌ உலக தேவை

நன்றிங்க அனு அக்கா
அன்புடன் ஆதி