புழுங்கல் அரிசி/ பச்சரிசி - 200
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்
உளுந்து
கடுகு
சிவப்பு மிளகாய் – 2
அரிசியை நன்றாக களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போடவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மாவு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து கை விடாமல் நன்றாக கிளறவும்.
உருட்டும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
சூடு ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி சட்டியில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறலாம்.
மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு வகை.