Author Topic: தேங்காய் கச்சோரி  (Read 864 times)

Offline kanmani

தேங்காய் கச்சோரி
« on: September 04, 2012, 01:04:41 PM »

தேவையான பொருட்கள்:

மைதா - 5 கப்

தேங்காய் - 2 கப் (துருவியது)

ஏலக்காய் - 2

இலவங்கப்பட்டை - 2

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஏலக்காய் மற்றும் பட்டையை நன்கு பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, நெய், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, மென்மையாக சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு சிறு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், பட்டை பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதில் கட்டை விரளால் சிறு ஓட்டை போட்டு, அதில் சிறிது இந்த தேங்காய் கலவையை வைத்து மூடி வைக்கவும். இதேப் போல் அனைத்து மாவுகளையும் செய்ய வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான தேங்காய் கச்சோரி ரெடி!!!