Author Topic: முள்ளங்கி சூப்  (Read 1084 times)

Offline kanmani

முள்ளங்கி சூப்
« on: September 04, 2012, 12:49:00 PM »
தேவையான பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி - 2

பார்லி அரிசி - 100 கிராம்

பச்சைப் பட்டாணி - சிறிதளவு

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

காரட் - 1

பால் - 100 மில்லி

காலிபிளவர் - சிறிதளவு

செய்முறை:

பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்கவும். பின்னர் முள்ளங்கி, காலிபிளவர், காரட் ஆகியவற்றை நறுக்கி வெந்த பார்லியுடன் சேர்த்து மீண்டும் வேக வைக்கவும். பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத்தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைத்து சாப்பிடலாம்.