Author Topic: வெள்ளரிக் காய் சூப்  (Read 805 times)

Offline kanmani

வெள்ளரிக் காய் சூப்
« on: September 04, 2012, 12:47:31 PM »
தேவையான பொருட்கள்:

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

வெள்ளரிக்காய் (துருவியது) - 1

மைதா மாவு- 1 மேஜைக் கரண்டி

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி

பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி

வெண்ணெய் - 25 கிராம்

மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்கவும். பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.