Author Topic: ரசமலாய்!  (Read 898 times)

Offline kanmani

ரசமலாய்!
« on: September 04, 2012, 12:39:47 PM »


தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்

சீனி - 200 கிராம்

ஏலக்காய் - 4

குங்குமப் பூ - அரை கிராம்

வினிகர் - அரை மேசைக்கரண்டி

ரசமலாய் செய்முறை

பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அதில் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும். பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும். 10 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வேண்டிய வடிவங்களில் தட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும். மிதமான தீயில் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பனீர் உருண்டைகளை போட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக உடைந்து போகாமல் கிளறவும். இப்போது சுவையான ரசமலாய் ரெடி. பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ரசமலாயை தனியாக கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் வைத்து ஜில் என்றும் சாப்பிடலாம் சுவை கூடுதலாக இருக்கும்.