தேவையான பொருட்கள் :
பிரட் தூள் - 2 கப்
பால் - 1 கப்
முந்திரி - 10
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
முதலில் பிரட் தூளை பாலில் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைக்கவும். நீண்ட நேரம் இதனை ஊற வைக்க வேண்டாம். இல்லையென்றால் வதங்கி போய்விடும்.
அந்த 10 நிமிடத்திற்குள், வெல்லத்தை ஒரு வாணலியில் போட்டு, தீயை குறைவாக வைத்து நன்கு கரைக்கவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் விடலாம்.
எப்போது வெல்லம் மென்மையாக, சற்று அடர்த்தியாக வரும் போது, துருவிய தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.
இப்போது அந்த பிரட் தூள் மற்றும் பாலை ஊற்றி, நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும். அவ்வாறு கிளறும் போது, நெய் கலவையிலிருந்து தனியாக பிரியும் நேரத்தில் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் முந்திரி பருப்புகளை போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும்.
இறக்கியப் பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடானது ஓரளவு போனப் பின், அதனை வேண்டிய வடிவத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளலாம்.