Author Topic: சுவை  (Read 571 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
சுவை
« on: August 31, 2012, 02:14:39 PM »
என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை

தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன‌

பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது

மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய் மாறி
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

கூட்டித்தள்ளிவிட முடிகிற‌
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல‌
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.

யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!
அன்புடன் ஆதி

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: சுவை
« Reply #1 on: August 31, 2012, 03:16:18 PM »
arumaiyana varigal aathi thanimaiya evlo azhaga soli irukiga athaium suvai oda soli irukiga vazhthukal inum  nirya kavithaigal ezhuthanum

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: சுவை
« Reply #2 on: August 31, 2012, 04:19:09 PM »
நன்றி Dharshini
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: சுவை
« Reply #3 on: August 31, 2012, 04:38:04 PM »


அருமையான பதிவு ஆதி ... தனிமைகள் அதோனோட தாகங்கள் பற்றிய அழகான பதவு ... நமக்கும் அந்த தனிமைகள் வரும் போதுதான் அதன் தாக்குதல் சக்தி பற்றி தெரியும்  என்பதை அழகாய் சொல்லி இரு^கின்றீர்கள் ... தனிமைகள் வித்தியாசமானவை ... அவை ஏற்படும் காரணங்களை வைத்துதான் தனிமை தராசில் இடப்படுகிறது இல்லியா ... எந்த தனிமை கொடுமை விரக்தி அழுகை எல்லாவற்றையும் பிரசவிகின்றது என்பதும் இங்கேதான் முடிவாகிறது ...

Quote
என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: சுவை
« Reply #4 on: August 31, 2012, 04:47:06 PM »
//அவை ஏற்படும் காரணங்களை வைத்துதான் தனிமை தராசில் இடப்படுகிறது இல்லியா ... எந்த தனிமை கொடுமை விரக்தி அழுகை எல்லாவற்றையும் பிரசவிகின்றது என்பதும் இங்கேதான் முடிவாகிறது ...

//

நிதர்சனமான வரிகள்
அன்புடன் ஆதி