அருகம்புல்லின் சாறினை அதிகாலையில்
வெறும் வயிற்றினில் பருகும் போது
கசப்பின் கடுமை குரல்வளையை பிடித்தாலும்
பருகியப்பின் அதனால் நாம்பெறும்
குணநலன் அது பன்மடங்கு பெருகுவதை போல்
கவிதை என்பது படைக்கும் வரை
கடினங்களிலேயே மிக கடினம்
படி சிரத்தைக்கு பிறகு படித்துவிட்டால் - பின்
பெறுகின்ற பரவசமோ பழரசம் போல்
என் கவிதை அனுபவம்..