Author Topic: உயிர்  (Read 720 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உயிர்
« on: August 30, 2012, 01:53:45 AM »
ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மற்றொன்று.
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: உயிர்
« Reply #1 on: August 30, 2012, 02:00:50 AM »


இரண்டு மனம் வேண்டும்  ... இந்த பாடல் ஞாபகத்துக்கு வந்து விட்டது .... காதல் உடைவிலும் இவளவு மென்மையை கலக்க எப்படி முடிகிறது ..

காதலை காதலித்தால் அன்றி இந்த மென்மை வராது


Quote
திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்

 

ஹிஹி  காதல் என்றாலே ஒன்றில் ஆண் இந்த நிலை அடைகிறான் இல்லை பெண் இந்த நிலை அடைகிறாள் ... பரிதாபம் நீங்கள் இந்த நிலை அடைந்துவிட்டீர்கள்  அருமையான வரிக்கோர்ப்புகள்-.... ஆழமான உள்ள கிடக்கைகள் .. அருமை
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: உயிர்
« Reply #2 on: August 30, 2012, 02:16:33 AM »
//ஹிஹி//  காதல் என்றாலே ஒன்றில் ஆண் இந்த நிலை அடைகிறான் இல்லை பெண் இந்த நிலை அடைகிறாள் ...

இப்படி ஆரம்பித்ததாலேயோ என்னவோ

//பரிதாபம் நீங்கள் இந்த நிலை அடைந்துவிட்டீர்கள் //

இந்த வரிகளை படிக்கும் போது அடக்க முடியாது சிரிப்பு வந்துவிட்டது

நன்றிங்க‌
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: உயிர்
« Reply #3 on: August 30, 2012, 02:19:07 AM »
ஹஹஹா எப்படியோ சிரித்து விட்டீர்கள் போதும்தானே ..உண்மைகள் சில சமயம் இப்படிதான் சிரியோ சிரின்னு சிரிக்குமாம் ... ஹிஹி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: உயிர்
« Reply #4 on: August 30, 2012, 02:29:37 AM »
எங்க ஊருப்பக்கத்துல சொல்லுவாங்க பொழப்பு சிரியா சிரிக்குதுனு, அததானே நீங்களும் சொல்றீங்க ? :D
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: உயிர்
« Reply #5 on: August 30, 2012, 02:34:18 AM »
 ;D ;D