Author Topic: எனது பயணம்  (Read 1312 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எனது பயணம்
« on: August 29, 2012, 10:15:30 PM »


ஒரு குருட்டு தைரியத்தின் துணையோடு
FTC தளத்தினில் தடம் பதித்தேன்
ஓர் கத்துக்குட்டி கவிஞனாய்
ஏதேதோ கிறுக்கல்களுடன்

நன் அடிவைத்த அன்  நேரமும்
எனை வரவேற்று வரி பதித்த
பொன்னானவரின் பொன் வாழ்த்தும்
ஒருவழியாய் எனக்கும் வரிகளை வழங்கியது     

இடையிடையே சிறுசிறு இடையூறுகள்
இடையூறுகள்  தவிர தடையூரில்லை
நம்பிக்கை எனை இழந்திட துணிந்திட்ட போதும்
நம்பிக்கையினை துளியும் இழக்காமல் நான்

காலவோட்டத்தினில் எத்தனை கால்தடங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்  பதிந்தன - பின்
அன்றொன்றும் இன்றொன்றுமாய் விலகிட
அன்றும் இன்றும் இனி என்றும்  இதோ தொடர்கின்றேன் நான்

மன்றத்தினில் இன்றும் என் மனம்கவர்ந்திட்ட 
மாமனிதனாய் ஒரு சிறு (குட்டி gab ) ஜீவன்
ஆணென்று தான் அறிமுகம் அவன் எனக்கு
ஆனாலும் அரவனைப்பினில் அவன் ஒரு தாய்

அவன் ஒருவனுக்கே எல்லாபுகழையும்
அற்பணிக்கத்தான் ஆசை இந்த ஆசை க்கு
 அழகு குயில்கள் சிலவற்றின்
ஆக்ரோஷத்தை அனுபவிக்க மனமில்லாததால்
அவர்களுக்கும் என் பயணத்தில் பெரும்பங்குண்டு
கவிதாயினிகள் யார்  யார் அவர்கள் என்று
அவரவர் பொறுப்பு என அவர்களிடமே  விட்டுவிடுகின்றேன்

ftc நண்பர்கள் தம் நற் துணையோடு இதோ
இன்றும் தொடர்கிறது என்  பயணம் இன்பமாய் ......

    எனது பயணம்


Offline supernatural

Re: எனது பயணம்
« Reply #1 on: August 30, 2012, 12:47:31 PM »
தங்கள் கவிதைப்பயணம் இனிதாய் தொடர ...
மற்றும் ஒரு குட்டி ஜீவனின்  நல்வாழ்த்துக்கள்...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எனது பயணம்
« Reply #2 on: August 31, 2012, 10:03:06 AM »
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !!

Offline Anu

Re: எனது பயணம்
« Reply #3 on: August 31, 2012, 11:23:11 AM »
உங்க பயணம் நண்பர்கள் இணைய தளத்தில் இனிதே    தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசை அஜித்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: எனது பயணம்
« Reply #4 on: August 31, 2012, 11:32:02 AM »
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !!