விளக்கத்துக்கு நன்றி அனு..
//யாரோ ஒருவனின்
கனவுக்குள் நுழைய
அலங்கரித்துப் போகிறாள்
யாரோ ஒருத்தி//
யாரோ ஒருத்தி யார் யாராகவெல்லாம் இருக்க முடியும், அதிஸ்டம், வஞ்சகம், பொய், ஏமாற்றம், எதிர்ப்பார்ப்பு, நிலையாமை, காதல், போலிமை, ஏய்பு, ஆசை, செல்வம், பதிவி, புகழ்
இவை எல்லாம் அழகானவைத்தான், இதன் பின்னால் எல்லாம் அலைகிறவர்கள் தான் நாம்
//வழிநெடுக
யார் யாரின் கனவுகளையோ
கிழித்துப் போட்டபடி//
மேலே குறிப்பிட்ட அனைத்திற்கு இப்படி ஒரு குணம் இருக்கு
அந்த யாரொ ஒருத்தி ஒரு சினிமா, சின்னத்திரை, அல்லது ஒரு பிரமலம் என்று கூட எடுத்துக்கலாம்
அந்த யாரொ ஒருத்தி ஒரு விளம்பரம் என்று அதை நம்பி ஏமாந்தவர்களின் கனவு கிழிக்கப்பட்டுவிட்டது என்று கொள்ள முடியும்
யாரோ ஒருத்தி நிலா வென்றால் இரவில் இருட்டுகனவுகளை கிழிக்கிறாள்
யாரொ ஒருத்தி ஞாயிறு என்றால் நட்சத்திர கனவுகளை கிழிக்கிறாள்
யாரொ ஒருத்தி ஒரு போலிச்சாமியாரின் போலி நாடகமென்றால் கிழிக்கப்படுவது இவரால் நம் வாழ்வு மோடமடையும் எனும் பக்தர்களின் கனவு
யாரோ ஒருத்தி தேர்தல் என்றால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மறுபடியும் மறுபடியும் கிழிக்கப்படுகின்றன ஜனங்களின் கனவுகள்
இப்படி பல அர்த்தம் இந்த கவிதைக்குள் இருக்கு