தனிமை விரும்பியாய்..
சிரிப்பு மறந்தவளாய் ...
செல்வச்செழிப்பிருந்தும் பெரும் வறுமையில் ...
வாடிய என் மனம் அதில் ......
சில்லென்ற பனி காற்றாய் ...
புது வசந்தமாய் ....
வாசம் செய்ததது ஒரு மனம்....
என் காதலன் அவன் பொன்மனம்...
மலர்தனை மலரவைக்கும் ஆதவன் போல் ...
என் முகம் அதை அவன் குரலால் மலரவைத்து ...
அதில் அகம்மகிழும் என் இனியவன்...
"நான்" என்ற சொல்லின்....
அர்த்தம் மொத்தமும் அறிந்தவன்...
என்னை முற்றிலும் உணர்ந்தவன்...
என் மௌனத்தின் அர்த்தத்தையும் ...
எளிதாய் ..அழகாய் உரைப்பவன்....
பார்த்து பழகிய காதலையே ..
மறுதலிக்கும் மாந்தர் இடையே ...
கண்காணா காதலி என்னை ..என் மனதை ...
உயிரினும் மேலாய் நேசிப்பவன் .. ...
என் உயிர் காதலன் அவன் நெஞ்சில்...
சிறு நினைவாயாவுது மஞ்சம் கொள்ள வேண்டும் ...
என்றும் என்றென்றும் ...