Author Topic: ~ மருத்துவக் கவிதைகள் ~  (Read 3428 times)

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #15 on: August 29, 2012, 05:57:33 PM »
மிளகு.!மருத்துவக் கவிதைகள் .



மிளகு.!
விஷத்தை முறிக்கும்
விசியம் இதிலிருக்கு.

கை வைத்தியத்தில்
மிளகுக்கே முன்வுரிமை.

எதிரி வீடுக்கும்,
கைப் பிடி மிளகோடு
பயமின்றிப் போகலாம்.

மிளகு மற்றும் வால் மிளகு
என இரு வகைப்படும்.

மிளகுக்கு
மலையாளி, குறுமிளகு
கோளகம்.என்ற
பெயரும் உண்டு

கொடிவகை செடி.
இதன் காய்களை
காயவைத்தாலே
மிளகு அவதாரம்.

மிளகுப்பற்று கண்டால்
தலைவலி ஓடும்

மிளகுத் தூளும்
உப்புத் தூளும்
கலந்து பல் துலக்கி வர

பல்வலி, ஈறுவலி,
வாயில் துர்நாற்றம்
எல்லாம் மறையும்.

மிளகு ரசம் என்றால்
சாதமும்
சத்தமில்லாமல் போகும்.

கண் திருஷ்டிக்கு
கண் கண்ட பொருள்.

ஊக்கம் பெறவும்
குறைகள் போக்கவும்...

விஷத்தை விரட்டும்
மிளகு மருந்தாகும்

மிளகை நீ உண்டுவந்தால்
பல நோய்க்கு தீர்வாகும்.

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #16 on: August 29, 2012, 05:59:06 PM »
வாழைப்பழம் ...



வாழைப்பழம் ...
தெருக்களில் மலிவாக
கிடைக்கும் உன்னதமான
பலம் பொருந்திய பழம்!

ஃபிரக்டோஸ்,சுக்ரோஸ்,
போன்ற சர்க்கரைகளுடன்
நார்ச்சத்தும்
கூட்டணியோடு
நல்லாட்சிவுடன்
ஆசியும்
தரும் இந்த பழம்!

தமிழ்ப் பேசி,பழக
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

டென்னிஸ் விளையாட்டு
வீரங்கனைகளுகும் இது,
தோள் கொடுக்கும்,
உரமாய் மாறி
விளையாட
துணை நிறுக்கும்

வலுவில்லாத
நிலைகளிலும்,
100முதல் 150 வரை
தாரைத் தாங்கும்,
வாழை  மரம்
விந்தையான மரம்.

உண்டப்பின்
விட்டமின்
பொட்டாசியம்
உடலுக்குள்  மாறும்!

தற்போது
எய்ட்ஸ் வராமல்
தடுக்கும் மருந்தும்
கிடைக்கலாம் என்ற
கருதும்  நிலை
இருக்க...

இன்னும் சொல்லலாம்.
வாழைப் பழத்தின்
பலனை..
நீ அறியணும்,
இதன் குணத்தினை

மங்கலக்  காரியத்தின்
நண்பன் இவன்..
இனி இவனை
உன் வீட்டில் வளர்த்தால்
உன் உடம்புக்கும் நலம்
இந்த பழம் தரும் பலம்

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #17 on: August 29, 2012, 06:04:26 PM »
குங்குமப்பூ!



மணம் வீசி
வர்ணத்தை
கொடுத்து
மனதை
கொள்ளைக்கொண்டு
அழகாய் மாற்றும்
குங்குமப்பூ!

காஷ்மீரின்
கனவுக் கன்னி
இந்த குங்குமப்பூ !

மலையை தாண்டி
வந்தாலும்,
காரமும் மனமும்,
மாறாத ஜாதிப் பூ...

நோய் தீர்க்கும்
மருந்தாகவும்,
அழகான
நிறத்துக்கு
வரமாகவும்...

பூவையர்கள்
சுடாத பூவாகவும்
உட்கொள்ள
மறுக்காத பூ
குங்குமப்பூ!

பூவோடு மணக்கும்
நாருப்போல.
தாய் உட்கொண்டால்..
பிறக்கும் குழந்தைக்கும்,
அழகூட்டும்,
குங்குமப்பூ!

பன்னீர் ரோஜா
கல்கண்டு
தேன் குங்குமப்பூ
கூட்டணிகள் சேர்ந்தால்

தாதுக்கும்
பெண்களின் மாதவிலக்கும்
அரும் மருந்தாகும்...

உன் உடலுக்கும்
பளபளப்புக்கும்
தூணாயிருக்கும்

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #18 on: August 29, 2012, 06:07:25 PM »
வெற்றிலை....



வெற்றிலை
இதன் முகவரி மலேசியா!
இது ஒரு மருத்துவ மூலிகை!

தமிழர்களின்
கலாச்சாரத்தோடு
இணைந்து
மங்கள காரியத்தில்,
முகமலர்ச்சியோடு
வரவேற்பதில்
இதன் முக்கிய நிலை!

விதைகள் இல்லாத
கொடித்தாவரமே
இந்த வெற்றிலை!
இதன் காம்புகளை
வெட்டி பதியம் போட்டாலே
வளரும் இந்த இலை !

கரும் பச்சையை
ஆண்ணென்றும்,
இளம் பச்சையை
பெண்ணென்றும்,
வெற்றிலைக்கு
உறவுண்டு...
இல்லற நல் உறவுக்கும்
இதில் பங்குண்டு!

கால்சியம்
இரும்பு
நீர்சத்து,புரதம்,
கொழுப்பும்
கலந்திருக்கு...

சவிக்கால்
என்ற வீரியமும்
நிறைந்து இருக்கு...

வெற்றிலையோடு
பாக்கும்,
சுண்ணாம்பும்
கலந்தால்,
வாய் சிவக்கும்
நாற்றத்தை விரட்டும்
உண்ட உணவு
ஜீரணமாகும்!

வெற்றிலை .
இது வெற்றி இலை
மருத்துவத்தில்
மகத்துவம் கொண்ட,
உறவுனிலை
இந்த வெற்றிலை !

கும்பகோணம் வெற்றிலை
உலகப் பெயர் பெற்றது
இதை அறிய
சுவைத்து பார்த்து
சொன்னால்
எனது கவிதைக்கு
நீங்கள் தரும்
வாழ்த்து மாலை!

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #19 on: August 31, 2012, 02:25:13 PM »
மருதாணி...



தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!

இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,

திருமண,பண்டிகை
காலத்திலும்
புடவைக்கும்
தாவணிக்கும்...

மருதாணியே
தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!

தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும்
மருந்தாகும்!

தூக்கம்,மறந்த
துக்கத்திற்கும்
பூவையர் போலவே....

மருதாணி பூவும்
தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!

மறுதோன்றி
அழவணம்
 ஐவணம்
மெகந்தி என்ற
துணைப் பெயர்கள் கொண்ட,

மருதாணி ஒரு
கிருமி நாசினி,
மறுக்காமல்
நீ வளர்க்க யோசி!

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #20 on: August 31, 2012, 02:27:33 PM »
சீத்தாப்பழம்...(மருத்துவக்கவிதை)



லுக்கும்
எலும்புக்கும்,
சீத்தாப்பழம்
சிறப்பு பெரும்,

முடி உதிர்வை தடுக்க,
பலத்தின் விதைப்பொடி
விடைசொல்லும்.

மேலும்
சிறுபயறு மாவு
கூட்டணி சேர,
பேன்கள் ஒழிந்துப்போகும்...

முடி மிருதுவாகும்
அழகு சேர்க்கும் வழியில்
சித்தாப்பழம்
தலைமை ஏற்கும்.

இதயம் காக்கப்படும்
பலப்படும்
காசநோயை விரட்ட
துணை நிறுக்கும்...

பழத்தின்  பலன்களை
அறிய...
இந்த சீத்தாப்பழம்
உண்டு வாழ்ந்தால்
உண்மை புரியும்...

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #21 on: August 31, 2012, 02:30:02 PM »
சோற்றுக் கற்றாழை



சோற்றுக் கற்றாழை
இது ஒரு

மருத்தவ நிவாரணி...

இலைச்சாறுகளில்
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள் பாலிசக்கரைடு
மற்றும்...
ஆலோக்டின்பி’ எனும்
பல வேதிப்பொருட்கள் உள்ளன.

பெண்களுக்கு என்றும் ராணியாய்,
வரம் தரும்
அடுக்கு மடல் கொண்ட செடி.

இது ஒருவகை இனிப்பு கூழ்,
இது மூல நோய்க்கும்,
வயிறுப் புண்ணுக்கும்
இலையின் சாறு மருந்தாகும்.

அழகுக்கு
அழகுச் சேர்க்கும்.
சோற்றுக் கற்றாழை
தாயகம்
தென்னாப்பிரிக்கா
மற்றும் அரேபிய நாடாகும்...

இதை நாடாமால் போனால்
அரியசெடியை இழந்த நிலையாகும்.

இதன் மருத்துவ குணம்
அறிந்தும்
இன்னும் நாம் வீட்டில்
பயிரிட மறுத்ததால்,
இனியும் இல்லாமல் போனால்
நமது இயலாமையைக் குறிக்கும்...

வரும் தலைமுறை சபிக்கும்
இளமைக்கு
இது தேவை என்றால்
இன்னுமா தயக்கம்...
பயிரிட ஏனப்பா சுனக்கம்?

இதன் மருத்துவம்
பயன் தரும்.
இளமை தரும்
சோற்றுக் கற்றாழை,
நமக்கு என்றும் சொந்தம்

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #22 on: August 31, 2012, 02:32:01 PM »
நடைப் பயிற்சி



தினம் தினம்
நடைப் பயிற்சி
ஒருவித
உடற்பயிற்சி
உனது
உடலுக்கு எழுச்சி

நடைப் பயணம்
கொழுப்பைப்
பார்த்து குறைக்கும்
தொப்பையை
கரைக்கும்...

நடப்பது நடக்கட்டும்
நடந்து நடந்து

இனி இளமை
தொடர வழிப்பிறக்கட்டும்.

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #23 on: August 31, 2012, 02:48:07 PM »
அருகம்புல் கவிதை...



அருகம்புல்லே!
நீ அருகிலிருந்ததால்
உன் அருமை
எனக்கு தெரியவில்லை..

உனக்குள் இருக்கும்
மகத்துவம்
மருத்துவம் பற்றி
அறிய மனம் நாடவில்லை...

நீ ஏழை வீட்டு
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ?
ஏற்க மனம் வரவில்லையா ?

உன்னை பறித்து
அரைத்து பாலோடு பருகினால்
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து
வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை
தடுக்கும் குணமுண்டு...

உன்னை அரைத்து
தேனோடு ஏலக்காய்
சேர்த்து பருகினால்
ரத்தம் சீராக்கி
உறுப்புகளை
பாதுகாக்கும் படை
வீரன் அல்லவா நீ

நீ எங்கள் வீட்டுத் தோட்டத்து
இலவச மருத்துவமணி
உன்னை கவனி
என சொல்லும்
மருத்துவ மாமணிகள்
அடித்த மணிக்கு பின்னே...

உன் வலிமை
அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்...

இனி உன்னை பயிறுடுவேன்.



வளர்ப்பேன்.
உனக்கும் என் மனதில்
இடம் தருவேன்.
உடலுக்கு வளம்
பலம் சேர்ப்பேன்...

Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #24 on: September 02, 2012, 08:47:02 PM »
தர்பூசணி...கவிதை



மனிதனுக்கும்
பழத்துக்கும்
ரத்த உறவுகள்,
சத்து உறவுகள்,
என...
உறவாட
உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்
பங்குவுண்டு!
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு

தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்
தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்...

தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!

தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்
உண்மை புரிந்திடும்!

Offline Anu

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #25 on: September 04, 2012, 06:23:27 AM »
romba nalla iruku unga collections ellaame mystery dear ..
 :-*


Offline MysteRy

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #26 on: September 04, 2012, 07:00:28 AM »



Offline Anu

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #27 on: September 21, 2012, 01:21:28 PM »


வெங்காயம் !






அட‌ வெங்காயமே!
உன்னை உரித்தால
ஒன்றுமில்லை என்றவர்
உன்னை உரித்த பின்
நான் வடித்த கண்ணீரை அறிந்திலர்!
அட‌ வெங்காயமே!
உன்னை உரித்தால்
கண்ணீரை வரவழைத்து
கூலியாக
என் கண்ணைத் திருத்துகிறாயே!
அட‌ வெங்காயமே!
உன்னிடம்
நீரிழிவு மருந்தான
இன்சுலின்' இருக்குதாமே!
அட‌ வெங்காயமே!
உன்னை மென்று தின்றால்
வயாகராவே
தேவை இல்லையாமே!
அட‌ வெங்காயமே!
உன்னை உண்டு களித்தால்
நீண்ட ஆயுளாமே!
அட‌ வெங்காயமே!
உன்னை உரித்துப் பார்த்தால்
ஒன்றுமில்லைத் தான்
ஆனால்
உனக்குள்ளே
எத்தனை எத்தனை
அருமருந்துகள் இருப்பதை
நானறிய மறந்தேனே!


Offline Anu

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #28 on: September 21, 2012, 01:23:59 PM »
வெங்காயம் !



உரிக்க உரிக்க உரியும் வெங்காயம், நாம்
உரித்த வாழ்க்கையின் வெறுமையை நமக்கே
உண்மையாய் உணர்த்தும் வெங்காயம்
உடம்புக்கு ஊட்டச்சத்து தரும் வெங்காயம்
புரதச்சத்தும், வைட்டமின்களும் நிறைந்த வெங்காயம்
மருந்துப் பொருளாகப் பயன்படும் வெங்காயம்
விஞ்ஞானிகள் பாராட்டும் அதிசய வெங்காயம்
 
வெங்காயத்தின் தோலை உரித்து சிறிது
வெல்லத்தைச் சேர்த்து சாப்பிட பித்தம் குறையும்,
வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தை பச்சையாக உண்டால்
வயிற்றில் உள்ள கிருமிகள் சாகும்
ஜீரண ஆற்றல் அதிகரிக்கும், முகப்பரு விலகும்
வெங்காயத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி நிற்கும்
வதக்கி தின்றால் சளி, இருமல் குணமாகும்
 
இப்படி பல குணங்களுடைய வெங்காயத்தைப்
பற்றி சிலேடையாக காளமேகப் புலவர் எழுதிய
பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது:

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

வினையினால் உண்டான உடலானது (வெங்காயம்)
தளர்ச்சியடைந்து சுக்கைப்போல ஆகுங் காலத்தில்
உயிர்தரிப்பதற்காக அயச்செந்தூரம் (வெந்த அயம்)
சாப்பிடுவதனால் வினையின்பயனை மாற்றமுடியுமோ?
மறு பிறவி எடுக்க வேண்டியிருந்தால் இந்த உடல்
(பெரும்காயம்) வேண்டியதில்லை. திருவேரகத்தில்
செட்டியாராக விளங்கும் முருகப்பெருமானின்
சீர்பொருந்திய இடம் (சீரகம்) ஆன அவன்
திருவடிகமலங்களே நமக்கு வீடு பேறு வழங்கும்
என்பது ஒரு பொருள்.
 




Offline Anu

Re: ~ மருத்துவக் கவிதைகள் ~
« Reply #29 on: September 21, 2012, 01:29:25 PM »

வாழைப்பழம் ...



வாழைப் பழம் வாழ்வை

வாழ்த்தும் பழமே!
தாழ்த்தும் உடல் கேடுகளை
வீழ்த்தும் பழமே!
 
சிக்கன விலையில் கனச்
சிக்கலை நீக்குமே!
விக்கின வயிற்றுக் கழிவினை
நீக்கும் பழமே!
 
ரத்தச் சர்க்கரை  அளவை
சத்தாய் காத்திடுமே!
தந்திடும் போதை  நோயை
தடுத்திடும் பழமே!
 
தலை மூளைச் சக்தியை
கலையாய் அலங்கரிக்குமே!
அலை மனத்தைக் கட்டும்
குலைசக்திப் பழமே!
 
வயிற்றுப் புண் அகற்றி
பயிற்றும் அமைதியை!
இயற்றும் இரும்புச் சத்தை
தயக்கமின்றித் தரும்பழமே!