Author Topic: எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?  (Read 5602 times)

Offline Global Angel


வைரத்திற்கு உரியவர் சுக்கிரன். பொதுவாக வைரத்தில் கார்பன் அணுக்களே அதிக‌ம் இருக்கிறது. எனவே, ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிந்தால், உடல் சூடாகி மேலும் இளைத்து விடுவார்கள்.

தேரை அமர்ந்த கல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட வைரக் கல்லை பட்டை தீட்டி அணிவதால் உயிர் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான், வைரக் கல்லை மோதிரத்தில் பதித்து அணியும் முன்பாக அதனை ஒரு வார காலம் வீட்டில் வைத்திருந்து அல்லது சட்டைப் பையில் வைத்திருந்து நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

வைரக் கல்லை வைத்திருக்கும் போது தேவையில்லாத சண்டைகள், குழப்பங்கள் ஏற்பட்டால் அந்தக் கல்லை மோதிரமாக அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.

மேலும் வைரத்திற்கு உரியவரான சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில் (ஆட்சி/உச்சம்) பெற்றிருப்பவர்கள் மட்டுமே வைர மோதிரத்தை அணிய வேண்டும். மேலும் 6, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் வைர மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதேபோல் வைரக் கல்லின் அளவு எத்தனை சென்ட் இருக்க வேண்டும் என்பதில் சில விதிகள் உள்ளன. பிறந்த தேதி, பிறவி எண், விதி எண் ஆகியவற்றை கணக்கிட்டு, சுக்கிரன் வலிமையைப் பொறுத்து எத்தனை சென்ட் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.