Author Topic: தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?  (Read 5297 times)

Offline Global Angel

தலைச்சம் பிள்ளைக்கு, தலைச்சம் பிள்ளையை திருமணம் செய்யக் கூடாது என்ற முன்னோர்கள் கூறியுள்ளனர். இது உறவுத் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு காரணம் முற்காலத்தில் உறவுத் திருமணங்கள் அதிகளவில் நடந்தன.

ஆனால், அன்னிய உறவில் திருமணம் செய்யும் போது தலைச்சம் பிள்ளைக்கு தலைச்சம் பிள்ளையை திருமணம் செய்யலாம். நெருங்கிய உறவில் மூத்த பையனுக்கும், மூத்த பெண்ணுக்கும் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு ஊனமுற்ற அல்லது உடல்நிலைக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உறவு வகையிலேயே கடைசிப் பொண்ணுக்கும், கடைசிப் பையனுக்கும் திருமணம் செய்வதில் தவறில்லை.