Author Topic: காத்திருகிறது  (Read 520 times)

Offline Global Angel

காத்திருகிறது
« on: August 22, 2012, 01:16:43 PM »
இருளை கிழித்து
ஒளியை
உமிழ்ந்து கொண்டிருந்தது நிலவு ..
என் பார்வை வட்டத்துள்
பதியும் அனைத்து காட்சிகளிலும்
அலையாக உன் முகம்
அடிகடி தோன்றி
என் நிகழ்வுகளை
இருட்டடிப்பு செய்த வண்ணம் ..

உன் வரவுக்காய்
காத்திருந்த மனதுள்
அமாவாசையின் ஆக்கிரமிப்பு
அரங்கேறிகொண்டிருந்தது ...
சமுத்திரம் சடுதியாய்
கண்களில் குடி புகுந்தது ..
உடைந்து சிதறும்
நீர் திவலைகளிலும்
உன் முகத்தை
செதுக்கிச் சென்றது
இரக்கமில்லாத உன் நினைவலைகள் ...
 
உன்னை காண துடிக்கும் இதயம்
கவிழ்ந்து படுத்து
கண்ணீர் விடுகிறது
கட்டி அணைக்க நீ இன்றி ...
ஒரு வேளை உணவுக்காய்
யாசகம் கேட்கும் பிச்சை காரியாய்
ஒரு முறை உன் முக தரிசனத்துக்காய்
முணு முணுக்கிறது மனது ...

எங்கே சென்றாய் ...?
என் பௌர்ணமியை
அமாவாசையாக்கி ...
என்று வருவாய் ..?
ஸ்ஸ்ஸ் .....
காலடிச்சத்தம்...
என் கனவுகளை சுருட்டி வைத்து
நிகழ்வுக்காக காத்திருக்கும் கண்கள் ...
ஏக்கத்துடன் மனது ...
ஏமாற்றத்தையும் எதிர்பார்த்து
காத்திருகிறது உனக்காய்...
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காத்திருகிறது
« Reply #1 on: August 24, 2012, 07:02:58 PM »
//என் பார்வை வட்டத்துள்
பதியும் அனைத்து காட்சிகளிலும்
அலையாக உன் முகம்
//

//உடைந்து சிதறும்
நீர் திவலைகளிலும்
உன் முகத்தை
செதுக்கிச் சென்றது
இரக்கமில்லாத உன் நினைவலைகள் ...
//

மிக ரசித்த வரிகள், வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: காத்திருகிறது
« Reply #2 on: August 25, 2012, 12:52:21 AM »
thanks aathi  :)