Author Topic: பாட்டி தாத்தா சொன்ன கதைகள்  (Read 8218 times)

Offline Anu

யார் முட்டாள்?


ஓர் ஊரில் முட்டாள் ஒருவன் இருந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாருக்கும் விளையாட்டுப் பொருளே அவன்தான். அவனிடம் இரண்டு துணிகளைக் கொடுத்துப் போட்டுவரச் சொன்னால், காலில் அணிய வேண்டிய துணியைச் சட்டை போல் மேலே அணிந்து இருப்பான். மேலே அணிய வேண்டிய துணியை எப்படியாவது காலுக்குள் நுழைத்து அணிந்து வருவான். அந்தக் கோலத்தில் அவனைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சிரித்து விடுவர்.
அந்த ஊருக்கு விருந்தினர் யார் வந்தாலும் முதலில் அவனை வரவழைத்து, ""இவனைப் போன்ற முட்டாள் உங்கள் ஊரில் உண்டா?'' என்று கேட்பர்.
ஒரு வீட்டிற்கு வெளியூரிலிருந்து நண்பர் ஒருவர் வந்தார். விருந்து முடிந்தது.
""இந்த ஊரில் முட்டாள் ஒருவன் இருக்கிறான். அவனை வர வழைத்தால், நம் பொழுது இனிதாகப் போகும்,'' என்று சொன்ன வீட்டுக்காரன்... அவனை வரவழைக்க ஆள் அனுப்பினான்.
சிறிது நேரத்திற்குள் அந்த முட்டாள் அங்கு வந்து சேர்ந்தான். வீட்டுக்காரன் அவனிடம் தன் இரண்டு கைகளையும் நீட்டி, ""நன்றாகப் பார்... ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயம் உள்ளது. இன்னொன்றில், ஒரு ரூபாய் நாணயம் உள்ளது. உனக்கு எது தேவையோ எடுத்துக் கொள்,'' என்றான்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான்.
""ஆ! ஒரு ரூபாய் பெரிய காசு!'' என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டான்.
""இவனைப் போன்ற முட்டாளை நீங்கள் எங்கேயாவது பார்த்ததுண்டா? ஒரு ரூபாயை விட ஐந்து ரூபாய் எவ்வளவு மதிப்புள்ளது? சின்னக்காசை எடுத்துவிட்டு இவ்வளவு கூத்தாடுகின்றானே?'' என்று சொன்னான் வீட்டுக்காரன்.
நண்பருக்கும், முட்டாளுடன், விளையாட வேண்டும் போல இருந்தது. தன் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டி, ""இதில், ஒன்றில் வைர மோதிரம் உள்ளது. இன்னொன்றில் வெறும் ஐம்பது காசு உள்ளது. ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்,'' என்றார் அவர்.
முட்டாள் இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துச் சிந்தித்தான். ஐம்பது காசைத்தான் கடைசியாக எடுத்தான்.
""இந்த முட்டாளோடு நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். எனக்கு வேலை இருக்கிறது,'' என்று உள்ளே சென்றார் வீட்டுக்காரர்.
""ஏன் முட்டாள்தனமாக நடக்கிறாய்? வைர மோதிரம் என்ன மதிப்புடையது? அதை விட்டுவிட்டு வெறும் ஐம்பது காசை எடுத்துக் கொண்டாயே... இனிமேலாவது சிந்தித்து, அறிவுள்ளவனாக நடந்து கொள்,'' என்று அறிவுரை சொன்னார் நண்பர்.
""ஐயா, நான் மிகக் குறைந்த மதிப்புடைய நாணயங்களையே எடுக்கிறேன். எல்லாரும் என்னை முட்டாள் என்று நினைத்து என்னிடம் நாணயங்கள் உள்ள கைகளை நீட்டுக்கின்றனர். இதிலேயே எனக்கு ஒரு நாளைக்கு நான்கைந்து ரூபாய் கிடைக்கிறது.
""நீங்கள் சொல்வது போல ஒரே ஒருநாள் விலை குறைவான நாணயத்தை எடுக்காமல், அதிக மதிப்புடைய நாணயத்தை நான் எடுத்துக் கொண்டால், அதன்பிறகு யாரும் என்னிடம் கையையே நீட்டமாட்டார்கள்,'' என்றான் முட்டாள்.
இதைக் கேட்ட வெளியூர்காரர் அசந்து போய்விட்டார்.
« Last Edit: August 21, 2012, 12:13:40 PM by Anu »


Offline Anu


சில புறாக்கள் இரை தேடி பறந்து திரிந்தன. இறுதியில் ஓர் இடத்தில் அரிசி
மணிகள் சிதரிக்கிடப்பதைக் கண்டன.

ஆர்வதுடனே அங்கே இறங்கி அமர்ந்தன. அரிசியை பொறுக்கி திண்ண தொடங்கின.
திடீரென ஒரு வலை அவைகளின் மீது விழுந்தது.அதில் அவை சிக்கிக் கொண்டன வலையை வைத்திருந்த வேடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவை பயந்து மனம் கலங்கின.

அவைகளின் தலைவனுக்கு ஒரு தைரியம் உண்டாயிற்று. பயபடாதீர்கள் . வலையை அப்படியே கவ்விப்பிடித்து ஒற்றுமையாய் பறந்து செல்வோம் என்று உத்தரவு போட்டது. அதன் படியே புறாக்கள் வலையை அலகால் பிடித்துகொண்டு ஒற்றுமையாய் பறந்து சென்றன.வேடன் பின் தொடர்ந்து ஓடிப் பாத்தான்.முடியவில்லை.

ஒரு எலியின் வளை அருகே அவை தரை இறங்கின . எலி வெளியே வந்து தன் கூறிய பற்களால் வலையை கடித்து புறாக்களை விடுவித்தது. அவை எலிக்கு நன்றி சொல்லிவிட்டு உற்சாகமாக மீண்டும் பறந்து சென்றன.


Offline Anu

வைர மோதிரம்
« Reply #2 on: August 21, 2012, 12:12:55 PM »

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

அந்த சமயம் பூபாலன் என்ற வழிப்போக்கர் அந்த ஊர் வழியாக வந்தார். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை
கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்தார். கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்றார்கள்.

சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்கப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. தன்னுடைய தீய குணத்தால் தனக்கே தீங்கு உண்டானதை எண்ணி வருந்தினார். மரியாதை ராமனிடம் உண்மையை ஒத்துக் கொண்டு திரண்டிருந்த ஊர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தன் தவறுக்குப் பரிகாரமாக கிடைத்த பணத்தில் பாதியை பூபாலனுக்கு பரிசாகக் கொடுத்து மீதியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்தார்.

பூபாலனும் சன்மானம் கிடைத்த மகிழ்வுடன் ஊருக்குச் சென்றார்.

மக்கள் மரியாதை ராமனின் சமயோசிதமான தீர்ப்பை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.


Offline Anu

நான்கு திருடர்கள்!
« Reply #3 on: August 21, 2012, 12:14:42 PM »

நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்" என்றான்.

மற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். "பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்" என்றார்கள்.

பாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.

சில நாட்கள் சென்றன.

ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.

"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்" என்றான் ஒருவன்.

"அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே!" என்றான் ஒரு திருடன்.

"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், "நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்றான்.

அந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், "பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்" என்றான்.

"உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே!" என்றாள் பாட்டி.

"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன்.

பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.

திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, "பாட்டி தரமாட்டேனென்கிறாள்" என்று உரக்கக் கத்தினான்.

மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள்.

பாட்டி "தோண்டியா?" என்று கேட்டாள்.

"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.

பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.

தோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.

வெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். "எங்கே அவன்"? என்று பாட்டியிடம் கேட்டார்கள்.

"அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி.

"எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன்.

"ஏன்? நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்" என்றாள் பாட்டி.

இதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் "அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம்? நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்" என்று கூச்சல் போட்டனர்.

பாட்டி அதற்கு மறுக்கவே அவளை நீதிபதியிடம் அழைத்துச் சென்று முறையிட்டனர்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, "பாட்டி செய்தது தான் தவறு. ஒப்புக்கொண்டதற்க்கு மாறாக ஒருவனிடம் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

வழிநெடுக புலம்பிய படியே நடக்க வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான மரியாதை ராமன் அழுது கொண்டே வரும் பாட்டியிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். நடந்தவை முழுவதையும் கேட்டறிந்த மரியாதை ராமன் "இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியல்ல" என்று தனது கருத்தை தெரிவித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் மன்னரிடம் அப்படியே இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டனர்.

அரசன் மரியாதை ராமனை அழைத்து "தமது அரசவையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பையே நீ விமர்சனம் செய்தாயாமே! சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய்?" என்று கேட்டார்.

"அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்" என்றான்.

சிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார்.

ராமனை அப்பொழுதே அரசவை நீதிபதியாக நியமித்தார்.


Offline Anu

நெய் வழக்கு!
« Reply #4 on: August 21, 2012, 12:15:49 PM »

ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள் பெயர் துர்கா.

யசோதையிடம் நிறையப் பசுக்கள் இருந்தன. துர்காவிடம் மிகக்குறைந்த அளவே பசுக்கள் இருந்தன. இருவரும் பால், மோர், தயிர், நெய் விற்பவர்களே. யசோதை ஊதாரித்தனமாகச் செலவுகள் செய்பவள்.

ஆனால் துர்காவோ சிக்கனமானவள். ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டுக்காரி துர்காவிடம் சென்று ஒருபடி நெய் கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகையால் ஒரு நாள் துர்கா, யசோதை வீட்டிற்குச் சென்று நெய்யைக் கொடுக்குமாறு கேட்டாள். அதற்கு யசோதை உன்னிடம் எப்போது நான் நெய் வாங்கினேன்? என்று கேட்டு விட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டென் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள். வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின் நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்க்காக ஒரி காரியம் செய்தான். ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர். பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு அருகில் வைக்கச் செய்தார்.

முதலில் யசோதையையும் இரண்டாவது துர்காவையும் சேற்றில் இறங்கி நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவி வரச் சொன்னார். முதலில் யசோதை சேற்றில் வேகமாக நடந்து வந்து பின் செம்பிலுள்ள தண்ணீரால் காலைக் கழுவினால். சேறு சரியாகப் போகவில்லை. சேறு அப்படியே இருந்தது.

அடுத்து துர்கா சேற்றில் இறங்கி நடந்தாள். பின் கிளிஞ்சலால் காலிலுள்ள சேற்றைச்
சுத்தப்படுத்திய பின் செம்பிலுள்ள தண்ணீரால் கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு
வந்தாள். செம்பிலும் சிறிது தண்ணீர் மிச்சமாக இருந்தது.

அடுத்து மரியாதைராமன், யசோதையை அழைத்து அவள் கருத்தைக் கேட்டார். நான் நிறையப் பசுக்கள் வைத்திருக்கிறேன். எனக்கு அவற்றால் போதுமான அளவு நெய் கிடைக்கிறது. ஆனால் துர்காவிடம் மிகக் குறைந்த அளவே பசுக்கள் இருக்கின்றன. அப்படியிருக்க நான் அவளிடம் நெய் கடனாக வாங்க வேண்டிய அவசியமில்லை. என்னை அவமானப் படுத்த வேண்டுமென்பதற்காக என்மேல் இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளாள் என்றாள் யசோதை.

இதைப் பொறுமையாகக் கேட்ட மரியாதை ராமன் தன் தீர்ப்பைச் சொல்லத் துவங்கினான்.

துர்கா காலிலுள்ள சேற்றை கிளிஞ்சல்களால் வழித்து எடுத்து விட்டு தண்ணீரால் கால்களைச்
சுத்தமாகக் கழுவிய பின் சிறிது தண்ணீரும் செம்பில் மிச்சம் இருக்கிறது. ஆகையால் அவள்
சிக்கனக்காரி. நீயோ காலிலுள்ள சேறு போகாமல் அவ்வளவு தண்ணீரையும் செலவழித்துவிட்டாய். இதிலிருந்தே நீ ஊதாரி எனத் தெரிகிறது. ஆகையால் நீ துர்காவிடம் நெய் கடனாக வாங்கி இருக்கிறாய் என்பது உறுதியாகிறது என்றார் மரியாதைராமன்.

யசோதையும், துர்காவிடம் நெய் கடனாக வாங்கிக் கொண்டதை ஒத்துக் கொண்டாள். பின் கடனாக வாங்கிய நெய்யை துர்காவிடம் கொடுக்க யசோதைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அனைவரும் பாராட்டினர்.


Offline Anu

நேர்மையான பிச்சைக்காரர்
« Reply #5 on: August 21, 2012, 12:21:29 PM »

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.



Offline Anu

புத்திசாலி ராணுவவீரர்!
« Reply #6 on: August 21, 2012, 12:24:39 PM »

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

“இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார்.

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”

“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

“சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

“இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

“இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

“இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


Offline Anu

கொக்குவுக்கு எத்தனை கால்
« Reply #7 on: August 21, 2012, 12:25:51 PM »

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.


Offline Anu

புத்தி பலம்!
« Reply #8 on: August 21, 2012, 12:27:04 PM »

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.


Offline Anu

நேர்மையாய் இரு!
« Reply #9 on: August 21, 2012, 12:28:02 PM »

செந்தில் ஒரு வேலையில்லாத பட்டதாரி. எத்தனையோ நிறுவனங்களில் அவன் நேர்முக தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். இதுவரை அவன் ஒரு தேர்வில் கூட வெற்றி பெறவில்லை. அவனை ஒத்த நண்பர்கள் அனைவரும் ஒரு வேலையில் சேர்ந்து விட்டிருந்தனர். அவர்களை எல்லாம் விட செந்தில் நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இருந்தாலும் அவனுக்கு ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் செந்திலுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தவுடன் செந்திலின் அப்பா சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பார். எந்த நிறுவனத்திலிருந்து தேர்வுக்கான அழைப்பு வந்திருக்கிறதோ, அந்த நிறுவனத்தில் தனக்குத் தெரிந்த யாராவது வேலை செய்கிறார்களா என்று யோசிப்பார். அப்படி யாரேனும் இருந்தால் பையனை அழைத்துக் கொண்டு போய் அவர்களிடம் அறிமுகம் செய்வார்.

தனக்கு தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லையென்றால் தன் நண்பர்களிடம் சென்று விசாரிப்பார். அவர்களுக்கு தெரிந்தவர்கள், அவர்களுடைய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று கேட்டு தெரிந்து கொள்வார்.

அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சென்று பார்த்து தன் மகனுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார். அதனுடன் விட்டுவிடாமல் நேர்முக தேர்வு நடக்கும் போது, “”குறிப்பிட்ட நபரை தனக்கு தெரியும்,” என்று சொல்லுமாறு மகனிடம் கூறி அனுப்புவார்.

செந்திலுக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை. இருந்தாலும் அப்பா சொல்வதை அவனால் தட்ட முடியவில்லை.

அடுத்த சில நாட்களில் சென்னையிலிருந்த ஒரு நிறுவனத்திலிருந்து செந்திலுக்கு கடிதம் வந்தது. நேர்முக தேர்வுக்கான கடிதம் அது. வழக்கம் போல செந்திலின் அப்பா சிபாரிசுக்காக ஆள் தேட ஆரம்பித்துவிட்டார். செந்திலையும் கூட்டிக் கொண்டு அலைந்து திரிந்தார். கடைசியில் அவருடைய நண்பருக்கு தெரிந்த ஒருவர் சென்னையில் இருப்பதாகவும், அவர் மனது வைத்தால் செந்திலுக்கு வேலை கிடைக்கும் என்று தெரியவந்தது.

சென்னை சென்று வர நிறைய செலவு ஆகும் என்பதால், தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே மகனை மட்டும் சென்னைக்கு அனுப்பினார். சிபாரிசுக்காக சந்திக்க வேண்டியவரை போய் பார்க்குமாறு மகனிடம் கூறினார். செந்திலும் அவருடைய விலாசத்தை வாங்கி வைத்துக் கொண்டான்.

புகை வண்டியில் செந்திலுடன் ஒரு பெரியவரும் பயணம் செய்தார். செந்திலும் அவரும் சிறிதும் நேரத்தில் பேச ஆரம்பித்தனர். “”நேர்முக தேர்வுக்கு முதல் நாள் கிளம்பினால் போதாதா?” என்று கேட்டார். உடனே செந்தில், சிபாரிசுக்காக தான் ஒரு நபரை சந்திக்கப் போவதாக கூறினான்.

“அந்த நபர் சிபாரிசு செய்தால் உனக்கு அந்த வேலை கிடைத்த விடுமா?” என்று கேட்டார் பெரியவர்.

“சிபாரிசு இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்று அப்பா சொல்கிறார்,” என்று இழுத்தான் செந்தில்.

“அப்படியென்றால் உனக்கு வேலை இதற்கு முன்பே, கிடைத்திருக்க வேண்டுமே,” என்று விடாமல் கேட்டார் பெரியவர்.

“எனக்கு பெரிய சிபாரிசு கிடைக்கவில்லை,” என்று சளைக்காமல் பதில் கூறினான்.

”வேலை கிடைப்பதற்கு நான் ஒரு வழி கூறுகிறேன். கேட்பாயா?” என்று கேட்டார் பெரியவர்.

”எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்ன வேண்டுமென்றாலும் செய்கிறேன்,” என்று உற்சாகமாக கூறினான்.

”சிபாரிசுக்காக நான்கு நாட்கள் அலைந்து திரிந்து வீண் செய்வதை விட வேறு விதமாக உழைக்கலாம்,” என்று பெரியவர் கூறினார்.

”எப்படி?” என்று ஆவலுடன் கேட்ட செந்திலை புன்னகையுடன் பார்த்தார் பெரியவர்.

”நிறுவனத்தில் யார் வேலை செய்கிறார்கள் என்று தேடிபிடித்து சிபாரிசுக்காக கெஞ்சி நிற்பதைவிட அந்த நிறுவனத்தை பற்றிய விபரங்களையும், நீ எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்திருக்கிறாயோ அதை பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள நேரத்தை செலவிட வேண்டும்… அதுவும் எப்படி?” என்று கேட்காதே.

“நீ கையில் வைத்திருக்கும் விலாசத்தை கிழித்துப் போட்டுவிட்டு ஒரு பெரிய நூலகத்தை தேடிச் செல்ல வேண்டும். இருக்கின்ற நான்கு நாட்களையும், வீணாக்காமல் நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பெரியவர்.

நிமிடங்களில் யோசனை செய்து பார்த்தான். “அப்பா சொல்லியபடி இதுவரை நடந்தபோதிலும் வேலை கிடைக்கவில்லை. பெரியவர் சொல்லியவாறு செய்து பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

“”உங்கள் அறிவுரைக்கு நன்றி. நீங்கள் கூறியபடியே நான் செய்கிறேன்,” என்று கூறி பெரியவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

தேர்வுக்கு முன்பிருந்த நான்கு நாட்களையும் நூலகத்தில் செலவிட்டான். நேர்முகத் தேர்வில் நிறுவனத்தை பற்றியும், அவன் பார்க்க போகும் வேலையை பற்றியுமே கேள்விகள் கேட்டனர். செந்தில் நிறைய கேள்விகளுக்கு பதில் கூறினான். தேர்வு நடத்தியவர்களும், “”வெரிகுட்” இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன்பே நிறுவனத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய். உன்னுடைய ஆர்வத்தை பாராட்டுகிறோம்,” என்று சொல்லி செந்திலை அனுப்பி வைத்தனர். அவர்களுடைய பாராட்டை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு அப்போதே வேலை கிடைத்துவிட்டதை போல தோன்றியது. உற்சாகமாக ஊருக்கு திரும்பினான்.

அப்பாவிடம் நடந்தவற்றை கூற அவனுக்கு பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எனவே, அப்பா கொடுத்த விலாசத்தில் இருந்த நபரை சந்தித்ததாக பொய் சொல்லிவிட்டான். சரியாக பதினைந்து நாட்கள் முடிந்தும். அந்த நிறுவனத்திலிருந்து வேலையில் சேருவதற்கான உத்தரவு வந்து சேர்ந்தது. செந்திலுக்கு தலைகால் புரியவில்லை. அப்பாவிடம் ஓடிச் சென்று விஷயத்தைக் கூறினான்.

“இந்த முறை பெரிய சிபாரிசு போல் இருக்கிறது. அதான் வேலை கிடைத்திருக்கிறது,” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

“அப்பா, நீங்கள் நினைப்பது தவறு. நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்,” என நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினான் ராஜா. அவனுடைய அப்பா இதுநாள் வரை தன் மகனை தவறான பாதையில் கூட்டி சென்றதை நினைத்து வருத்தப்பட்டார். தன் மகனுக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த பெரியவருக்கு மனதார நன்றி கூறினார்.

வேலையில் சேர்ந்த நாளன்று நிறுவனத்தின் முதலாளியை பார்க்க வேண்டும் என்று அவனுடைய மேலதிகாரி கூறினார். முதலாளியின் அறைக்குள் நுழைந்த செந்திலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய முதலாளி வேறு யாருமில்லை, சென்னைக்கு வரும் வழியில் அவனுக்கு அறிவுரை சொன்ன அதே பெரியவர் தான் முதலாளியாக உட்கார்ந்திருந்தார்.

“அய்யா நீங்களா… உங்களது அறிவுரைக்கு மிக்க நன்றி! உங்களால் நான் வாழ்வு பெற்றேன்,” என்று கூறி அவர் காலில் விழுந்தான்.

”நேர்மையாய் இரு என்றும் உயர்வடைவாய்!” என்று கூறினார்.


Offline Anu

பந்தா பரந்தாமன்!!
« Reply #10 on: August 21, 2012, 12:29:12 PM »

வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். அவரை யாரும் விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. எந்தவிதமான விஷயங்களானாலும் அவருக்கு அத்துப்படி, எனவே, இயல்பாகவே அவருக்குச் சற்று மண்டைக் கர்வம் ஏறி இருந்தது. நாட்டில் கல்வி அறிவு நிரம்பப் பெற்றவன். பெரிய அறிவாளி வாதங்களில் சிறந்தவன் என்று யாரும் அவர் இருக்கும் போது தலை காட்டிவிட முடியாது. அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு அரசாங்க அதிகாரி வந்தான். அவன் பெயர் வினோத். ல்லாவிதக் கலைகளிலும் அவனுக்குச் சிறிது பயிற்சி இருந்து வந்தது. அரசனின் உதவியால் படித்து முன்னேறியவன். இருப்பினும் அதை வெளிக் காட்டி கொள்ளமாட்டான். அமைதியாகவே தன் பணியினை செய்து வந்தான்.

வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து எப்போதும் மக்களின் கவனத்தைத் தன் பக்கம் வைத்துக் கொள்வதில் பந்தா பரந்தாமன் கில்லாடி. சாமர்த்தியக்காரராக விளங்கினார். மக்களில் பலர் அவரை இதன் காரணமாக வெறுத்தனர். என்றாலும் இந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டி கொள்ளவில்லை. அன்று மஹாபாரதம் பற்றிய காலட்சேபம் நடந்தது. பண்டிதரின் நாவன்மையை ரசித்த வாறு வந்து கொண்டிருந்தான் வினோத். திடீரென்று, “யோவ் பிரசங்கியாரே! நிறுத்தும்’ என்று குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். பட்டு பீதாம்பரம் உடுத்தி ஜகஜ்ஜோதியாய் நின்றான் பந்தா பரந்தாமன்.

“”என்ன? என்ன விஷயம்?” என்று பதறினார் பாகவதர். என்னையா கதை அளக்கிறீர் நீர்! பீஷ்மரை அர்ஜுனன் கொல்லவில்லை! சிகண்டி தான் அம்பு எய்து கொன்றவனே தவிர அர்ஜுனன் வெறும் கருவிதான். அர்ஜுனனால் அவர் கொல்லப்பட முடியாது. முற்பிறவியில் பெண்ணாக இருந்து பீஷ்மரால் வஞ்சிக்கப்பட்டவனே சிகண்டி என்ற அலியாகப் பிறந்து கோட்டை வாயிலில் இருந்த மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அர்ஜுனன் தேரில் ஏறி அம்புகளால் பீஷ்மரை துளைத்தான். சிகண்டியை முன் நிறுத்தி அர்ஜுனன் பீஷ்மரைக் கொன்றான் என்பது எல்லாம் மாயாவாதம்! சொல்வதை ஒழுங்காகச் சொல்!” என்று கம்பீரமாகக் கூறிவிட்டு பாகவதரை ஓரம் கட்டிவிட்டு அவரே சொல்ல ஆரம்பித்தார். இப்படி அநேகரை அவமானப்படுத்துவது பந்தா பரந்தாமன் ஸ்டைல்.

ஒரு சமயம் அறிஞர்கள் பலர் கூடி இருக் கும் சபையில் பல்வேறு விதமான சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி தன் மனதில் தோன்றியவாறு அதற்கு விளக்கமும் சொன்னார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களோ, அது வேதத்தின் ஓர் அங்கமா? அல்லது அவர் இயற்றியதா என்று கூடத் தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் அவருடைய தர்க்கவாதத்திற்கு அஞ்சி சும்மா இருந்தனர். வினோத்துக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அவனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான்.

“”உங்களில் யாருக்கேனும் எதுவாவது சந்தேகம் உண்டா? இருந்தால் கேளுங்கள்,” என்றார். அனைவரும் மவுனமாக இருந்தனர். வினோத் எழுந்தான். “”ஐயா, நீர் சொல்வது அனைத்தும் தவறு என்று எனக்குத் தெரியும். உமக்கு அது புரியும். சமஸ்கிருதம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கும் நான் சொல்வது விளங்கும்! ஆகவே, மேற்கொண்டு உரையாற்றாமல் இருப்பதே விசேஷம்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட பந்தா பரந்தாமனின் மூக்கு சிவந்தது. கண்களில் கனல் பறந்தன. “”யார் நீ, சின்னப் பயலே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? என்னுடைய கருத்துக்களைத் தவறு என்கிறாய்! எனக்குள்ள செல்வாக்கு உனக்கு தெரியாது என்று கருதுகின்றேன்! எனக்கு அரசே நெருங்கிய நண்பர்,” என்றார்.

“”ஐயா, இவ்வூர் மக்களை நீர் பயமுறுத்திக் கொண்டு வாழ்வதைப் போல என்னிடம் பயமுறுத்த நினைக்காதீர். நீர் சொல்வது தவறு என்றேன். அதற்கு ஏன் உம் செல்வாக்கைக் காட்டி என்னைப் பயமுறுத்த நினைக்கிறீர்.

“”உமக்கு அரசர் நண்பராக இருக்கலாம். அதே அரசரால் உம் அநியாயங்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ஓர் உயர் அதிகாரி நான். வேண்டுமானால் என்னைப் பற்றி அரசரிடம் நீர் புகார் கூறும், நானும் கூறுகிறேன்! யாருடைய பேச்சு எடுபடுகிறது என்று பார்க்கலாம்,” என்று கூறினான் வினோத். இதைக் கேட்டதும் வாதத்தில் வல்லவரான பந்தா பரந்தாமனுக்கு வேர்த்துக் கொட்டியது. பேச்சிழந்து நின்றார்.

“”உம்முடைய தவறுகளை நான் விளக்குவேன். எனக்கு நிறைய அலுவல்கள் இருப்பதால் இப்போதைக்கு முடியாது. அதுவும் தவிர இவ்வளவு பெரிய சபையில் மேலும் உம்மை அவமானப்படுத்த விரும்பவில்லை. “”எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில் எல்லாரையும் அவமானப்படுத்துவதை இன்றோடு விட்டு விடுங்க. மனிதர்களை மனிதர்களாக பாருங்க. அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க,” என்றான் வினோத், தலை குனிந்தான் பரந்தாமன்.


Offline Anu

சிவப்பு குல்லாவின் கதை!
« Reply #11 on: August 21, 2012, 01:03:29 PM »

டீதி என்ற நாட்டை டார்வின் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆணவத்தின் மொத்த உருவானவன். குடிமக்களுக்கு என்று எந்த நன்மையும் செய்யமாட்டான். டீதியை அடுத்த சின்னஞ்சிறு கிராமம் அது. தந்தையற்ற சிறுவன் ஜோன்ஸ். ஆறே வயது நிரம்பியவன். தன் தாய் பிலோமினாவுடன் அந்த கிராமத்தில் வசித்து வந்தான். ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் தன் அம்மாவுடன் டீதியில் உள்ள மாதா கோவிலுக்குச் செல்வான்.

“”அம்மா! நம்ம ஊர்லே மட்டும் ஏம்மா மாதாகோவில் இல்லை. நம்ம ஊர்லேயும் ஒரு மாதா கோவில் கட்டணும்மா,” என்று அடிக்கடி சொல்வான். அவன் மனம் நிறைந்த ஏக்கம் என்னவெனில் தன் கிராமத்திலும் இதைப் போல் ஒரு பெரிய அழகிய மாதா கோவில் கட்டணும். இந்த மாதா கோவில் சிலையைவிட பெரிய மேரியம்மா சிலை வைக்கணும். அவங்க கையிலே ரொம்ப அழகான வாயிலே விரல் சூப்பிக்கிட்டு இருக்கிற அந்த குட்டி குண்டு பாப்பா சிலை இருக்கணும். நான் வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு… நிறைய மெழுகுவர்த்தி ஏத்திவெச்சு, ஊரெல்லாம் கூட்டி ஜெபம் பண்ணணும்,” என்பான். ஒரு ஆறு வயது குழந்தையின் மனதில்தான் என்னவொரு புனிதமான ஏக்கம்!

அன்று கிறிஸ்து மஸ்… இவன் கிராமத்திற்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தா எல்லாருக்கும் பரிசுகளை வழங்கிக் கொண்டு இருந்தார். சிறுவன் ஜோன்ஸ் முறை வந்ததும் ஒரு பரிசுப் பெட்டியை கொடுத்தார்.

“”ஊஹும். எனக்கு இந்த பரிசு வேணாம் தாத்தா,” என்றான்.

“”அப்படியெல்லாம் சொல்லக் கூடாது தாத்தா கொடுக்கும் பரிசை வாங்கிக் கொள்,” என்றாள் அம்மா பிலோமினா.

“”மகனே! இந்த பரிசு வேணாம்னா வேறு என்னதான் வேண்டும்? கேள் மகனே என்றார் கிறிஸ்துமஸ் தாத்தா.
“”எனக்கு உங்கள் தலையில் உள்ள தொப்பி தான் வேண்டும்,” என்றான்.
“”என்ன? இந்த தொப்பியா? அட… இந்த பழைய தொப்பியா, உனக்கு இது எதுக்கு ராஜா?”
“”எதுக்குத் தெரியுமா? இந்த தொப்பியை எடுத்துக்கிட்டு வீடு வீடா போவேன். இதுலே அவுங்க போடற காசையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேத்துவெச்சு… அப்புறம் தொப்பி நிறைய காசு சேர்ந்ததும்… அதை வெச்சு இந்த ஊர்லே ஒரு மாதா கோவில் கட்டுவேன். அதுலே ஒரு பெரிய மேரியம்மா பொம்மை… அவுக கை அணைப்பிலே அந்த அழகு பாப்பா பொம்மை வைப்பேன், அப்புறம் நா வெள்ளை உடுப்பு மாட்டிக்கிட்டு, இந்த ஊரையே கூட்டி மெழுகுவத்தி ஏத்தி வெச்சு ஜெபம் செய்வேன்.

“”அந்த கனவில் தன்னையே மறந்து நீளமாக பேசிக் கொண்டே போக… கூட்டத்தில் ஒரே சிரிப்பு!
அப்படியே அவனை அள்ளி அணைத்து “”நிச்சயமாக உன் ஆசை நிறைவேற கர்த்தர் அருள்புரிவார்!” என்று சொல்லி தன் தலையிலிருந்த தொப்பியை கழற்றி… அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டை போட்டு “”இது என் முதல் காணிக்கை,” என்று சொல்லி அவனிடம் கொடுத்தார்.
அதனுடன் ஏராளமான பரிசுப் பொருட்களையும் அவனுக்கு கொடுத்து அவனை மகிழ்வித்தார். அதன்பின் நேரம் கிடைத்த போதெல்லாம் தன் தொப்பியுடன் ஊரை ஒரு ரண்வுட் அடிப்பான். இவனைப் பற்றி தான் அந்த ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டதே. அதனால் தங்களின் சக்திக்கு ஏற்றவாறு அவனின் தொப்பியில் காசு போடுவர். உடனே அதனை தன் குடிசையிலுள்ள சின்ன மண்கலயத்தில் போட்டு மூடி வைப்பான்.

ஓ! அன்று நகரத்திற்குப் போய் பணம் சேர்க்கும் எண்ணத்துடன் புறப்பட்டான் சிறுவன். திடீரென ரோட்டில் ஒரே சலசலப்பு… “”மன்னர் வந்து கொண்டிருந்தார். உம்… சீக்கிரம் அனைவரும் நகர்ந்து ஒரு ஓரமாக நின்று தத்தம் தலையிலுள்ள தொப்பியை கழற்றி விட்டு, சிரம் தாழ்த்தி மன்னருக்கு மரியாதை செய்யுங்கள்…” என்று கட்டளை இட்டுக் கொண்டே இரண்டு குதிரை வீரர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அவசர அவசரமாக கூட்டத்தினர் தங்கள், தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு சிரம் தாழ்த்தி நின்றனர். சிறுவனும் தன் தலையில் இருந்த அந்த சிவப்பு நிற தொப்பியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு தலை வணங்கி நின்றான். மன்னனின் வெள்ளி கோச் வண்டி அவர்களை கடந்து சென்றுவிட்டதற்கு அறிகுறியாக குதிரைகளின் குளம் பொலியும்… வீரர்களின் வாழ்த்து ஒலியும் விண்ணை முட்டின என்றால் மிகையாகாது. திடீரென மன்னன் மிக ஆங்காரமாக கத்தினான்.

“”ஏய்! வண்டியை பின்புறமாக செலுத்து,” என்றான்.
“”என்ன விபரீதம்” என்று உள்ளூற திகைத்துக் கொண்டனர் அருகிலிருந்த மந்திரிகள். பின்னோக்கிச் சென்ற வண்டி சிறுவன் நிற்கும் இடத்திற்கு பக்கத்தில் சென்றதும் தலையில் சிவப்பு குல்லாயுடன் நிற்கும் சிறுவன் ஜோன்ஸைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க “”டேய்! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி தலையில் குல்லாயுடன் நிற்பாய்?” என்றார்.

நடுநடுங்கிப் போனவன் சட்டென்று தன் தலையில் முளைத்திருந்த குல்லாயை எடுக்க… அக்கணமே அவன் தலையில் மற்றுமொரு சிவப்பு குல்லாய். இதனைக் கண்டு கூட்டம் வெலவெலத்தது… “”இந்த அயோக்கிய சிறுவனை அரண்மனைக்கு இழுத்து வாருங்கள்,” என்று கர்ஜித்தான்.
மிக முரட்டுத்தனமாக இரண்டு சிப்பாய்கள் சிறுவனை இழுத்துச் சென்று அரண்மனை முன் நிறுத்தினான். அரசபையிலும் வெளியிலும் ஒரே கூட்டம். மிக பீதியுடன் அழுது கொண்டே சபை நடுவே நிற்கப்பட்டிருந்த சிறுவனின் தலையிலிருந்த தொப்பியை எடுக்க அரசன் உத்தரவிட, சிப்பாய் ஒருவன் அதை எடுத்ததும்… இப்போது அந்த சிவப்பு குல்லாய்க்கு பதில் விலையுயர்ந்த ஒரு நீலக் குல்லாயை எடுக்க எடுக்க விதவிதமான நிறங்களில் ஒற்றைவிட ஒன்று மிஞ்சும் அழகிலும், மதிப்பிலும் இது என்ன மாயவித்தை. இது எப்படி சாத்தியம்? அரசருக்கு விசேஷமாக தொப்பி தயாரிக்கும் நிபுணர் அரண்டு போனார்.

“”மன்னா! இத்தனை உயர் ரக வேலைப்பாடுகளுடன் கூடிய விலை மதிப்புள்ள தொப்பிகளை மனிதர்களால் செய்யவே முடியாது,” என்று அடித்து கூறிவிட்டனர்.

“”இவன் ஒரு சூனியக்காரன். இவனை உயிரோடு விட்டு வைப்பது நம் நாட்டிற்கே ஆபத்து… இவனை அரண்மனை மேல் மாடத்திற்கு இழுத்து செல்லுங்கள். அங்கிருந்து தூக்கி கோட்டை வாசலைத் தாண்டி அகழியில் வீசி எறியுங்கள். அகழியிலுள்ள முதலைகளுக்கு இந்த சூனியக்காரன் ஆகாரம் ஆகட்டும்,” என்றான் அந்த கொடுங்கோல் அரசன்.

மேல்மாடத்திற்கு செல்லும் வழியெல்லாம் சிறுவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட தொப்பிகள்! மேல் மாடத்தில் மன்னன் தன் மந்திரிகள் புடைசூழ நிற்க மதிற்சுவர் ஓரமாக, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நின்றிருந்தான் சிறுவன். உம். விசிறி எறியுங்கள் இந்த சூனியக்காரனை என்று அரசன் கர்ஜிக்க… கடைசியாக சிறுவன் தலையில் இருந்த தொப்பியை ஒரு வீரன் தட்டிவிட… இரண்டு வீரர்கள் சிறுவனை இருபுறமும் பற்றி சுழற்றி எறிய எத்தனிக்கும் தருணத்தில் அரசனின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன.

“”நிறுத்துங்கள்!” என்று அலறினான் அரசன். சிறுவனின் தலையில் இப்போது வீற்றிருப்பது விலை மதிப்பற்ற, கண்களைப் பறிக்கும் வைரங்களும், வைடூரியங்களும், பதிக்கப்பட்ட ஒரு வைரக் கிரீடம்! அதன் ஒளி அங்கே கூடியிருந்த அனைவரின் கண்களையும் கூசச் செய்தது. அந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் என்ற பேராசையில் தான் அந்த அரசர் “”நிறுத்துங்கள்,” என்று அலறினான்!

“”டேய்! பையா! உன் தலையிலிருக்கும் அந்த கிரீடத்தை எனக்கு கொடுத்து விடு இதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும்?”

“”எனக்கு ஒண்ணும் வேணாம். இந்த கிரீடத்தை நீயே வெச்சுக்கோ… நா மொதல்லே போட்டிருந்த அந்த சிவப்பு குல்லாயை அந்த கிறிஸ்துமஸ் தாத்தாகிட்டே கொடுத்துடு. அந்த குல்லாயிலே நிறைய பணம் சேத்து எங்க ஊர்லே ஒரு பெரிய மாதா கோவில் கட்டணும்னு நினைச்சேன். நா தான் சாகப்போறேனே. இனிமே யார் கட்டப் போறாங்க. ரோஸி அக்கா வீட்லதான் என் அம்மா வேலை செய்யறாக… அவுகளுக்கு செய்தி சொல்லிடு. முகத்தில் எவ்வித சலனமுமின்றி சிறுவன் மழலையில் மிழற்ற மிழற்ற அப்படியே பதறினான் மன்னன்.

“”ஓ! இந்த சின்னக் குல்லாயில் பணம் சேர்த்து நிச்சயமாக இது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குல்லாய். இல்லையெனில் எப்படி இத்தனை அபூர்வ வகை குல்லாய்கள் இவனின் தலையில் தோன்றிக் கொண்டே இருக்குங்களே? இந்த விலை மதிப்பற்ற தங்கக் கிரீடத்தை நீயே எடுத்துக் கொள்ளுங்கள்.

“”என்னை கொல்லாமல் விட்டு விடு. இந்த குல்லாய்க்கு நிறைய பணம் கொடு என்று என்னிடம் பேரம் பேசலாமே? பேசவில்லையே… ஏன்? எதற்காக? யாருக்காக இவன் சிலுவையை சுமக்கிறான்? மன்னனின் நீர்பூத்த கண்களில் சிறுவன் தெரியவில்லை. அந்த விலைமதிப்பற்ற கிரீடத்தை அணிந்து கொண்டு நின்றது மாட்டுத் தொழுவத்தில் உதித்த அந்த தேவகுமாரன்தான்!

தன்னையும் மீறி “”ஜீஸஸ்…” என்று அலறிய படியே அச்சிறுவனை வாரி அணைத்துக் கொண்டான்! அடுத்த அரை மணி நேரத்தில் தன் மந்திரி பிரதாணிகளுடன் சிறுவனின் கிராமத்தை நோக்கிச் சென்றது அரசனின் வெள்ளிகோச். அதில் அரசனின் மடியில் சிறுவன். ஊரே கூடி அரசனை வரவேற்றது. அந்த குல்லாய் பயலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தது.

அடுத்து வந்த நாட்களில் அந்த கிராமமே புதுப்பிக்கப்பட்டு விட்டது. மிகப் பெரிய மாதாகோவில் எழும்பியது. கிறிஸ்துமஸ் குல்லா தாத்தா தான் வெள்ளை உடுப்பு போட்டுகிட்டு பூசை செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவன்… அவருக்கு இணையாக தானும் வெள்ளை உடுப்பை மாட்டிக் கொண்டு பூசை நேரத்தில் அவருக்கு உதவுவான்.

பின்னர் போப்பாண்டவரின் ஆசியுடன் வாடிகனிலிருந்து வந்த பிஷப் ஆண்ட்ரூ தான் இக்கோவிலின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து பயிற்சி பெற்ற சிறுவன் பிற்காலத்தில் பாதர் ஆகி இக்கோவிலை நடத்திய காலத்தில் இந்த தேவாலயத்தில் அந்த குட்டிப் பாப்பாவும் அவனின் அம்மாவும் நடத்திய அற்புதங்களுக்கு எல்லையே இல்லை. உலகின் பல பாகங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து கூட ஆரம்பித்தனர்.


Offline Anu

சாப விமோசனம்!
« Reply #12 on: August 21, 2012, 01:04:38 PM »

ஒரு சமயம் தேவலோகத்தில், தேவர்கள் உற்சாக மிகுதியால் அளவுக்கு மீறி அமிர்தத்தை சுவைத்து மகிழ்ந்தனர். எனவே, போதை தலைக்கேறி தாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து பூஜைக்குரிய பூங்காவனத்தை நாசம் செய்தனர்.

இச்செய்கையினால் கோபமுற்ற தேவேந்திரன் அவர்களைக் கண்டித்து, “”நீங்கள் செய்த இப்பாபச் செயலுக்கு பூலோகத்தில் தேனீக்களாக மாறி அங்கு காட்டிலுள்ள பூச்செடிகளிலிருந்து தேன் சேகரித்து பிழைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு உழைத்தால் உங்களுக்கு நல்ல புத்தி உண்டாகும்,” என சபித்தார்.

தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், “”பிரபு! நாங்கள் அறியாமல் செய்த இக்குற்றத்தை மன்னித்து தங்களுக்கு பணிவிடை செய்ய அருள் புரியுங்கள். சாப விமோசனம் அளியுங்கள்!” என்று வேண்டினர்.

“”அற்பர்களே! நீங்கள் செய்ததோ மாபெறும் குற்றம். கொடுத்த சாபம் கொடுத்ததுதான். அதைத் திரும்பிப் பெற இயலாது. இருப்பினும் இச்சாபத்திலிருந்து விடுதலைப் பெற ஒரே வழிதான் உள்ளது. காட்டில் தேன் சேகரிக்க வரும் வேடர்கள் தீ பந்தத்தோடு தேன் அடையில் வாழும் உங்களைத் தீயால் விரட்டி தேனை தங்கள் சுரை குடுக்கையில் சேகரித்துக் கொள்வர். ஆனால், எவன் ஒருவன் உங்கள் வேண்டுகோள்படி தீங்கு செய்யாமல் தேனைச் சேகரித்துக் கொண்டு நீங்கள் வாழும் தேன் அடையை கடலில் வீசி எறிகிறானோ அப்போது தான் நீங்கள் உங்கள் சுய உருவை அடைந்து என்னை அடைவீர்கள்,” என்றார் தேவேந்திரன்.

சாபத்தினால் தேவர்கள் தேனீக்களாக மாறி விந்தியமலை சாரல் காட்டில் தேனடையில் வாசம் செய்தனர். வழக்கம் போல் தேன் சேகரிக்கும் வேடர்கள் தீப்பந்தத்தில் கொளுத்தி தேனீக்களை விரட்டினர்.

ஒரு தேனீ தன் இனிய குரலில், “”அன்பார்ந்த வேடர்களே… எங்களைத் தீ பந்தத்தில் சுடாதீர்கள். உங்களுக்கு வேண்டிய தேனைத் தருகிறேன்,” என்றது.

வேடர் தலைவன் இக்குரலைக் கேட்டு, “”ஏதோ பிரமைப்போல் தோன்றுகிறது. தேனீயாவது பேசுவதாவது!” என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டனர். இது வழக்கமாக நடந்து வந்தது. துன்பத்திலிருந்து விடுதலைக் கிடைக்காமல் தேனீக்கள் தவித்தன. கடவுளை நினைத்து வேண்டின.

ஒரு நாள் நல்ல உள்ளம் படைத்த தர்மன் என்ற வேடன் தீ பந்தத்தோடு வந்தான். வழக்கம் போல் அவனைக் கண்ட தேனீ, “”அன்பனே! கொஞ்சம் நில். நான் சொல்வதைக் கேள். உன்னை செல்வந்தனாக மாற்றுவேன்,” என்றது.

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்த தர்மன்தான் காண்பது கனவா அல்லது நினைவா என்ற குழப்பத்தோடு தேனீயின் வேண்டுகோள்படி தீப்பந்தத்தை எறிந்துவிட்டு அது சொல்வதைக் கேட்க இசைந்தான்.

“”நண்பனே! நாங்கள் தேவர்கள். எங்கள் தலைவரின் சாபத்தால் தேனீக்களாக மாறி அல்லல் படுகிறோம். எங்களைக் காப்பாற்ற நீதான் உதவ வேண்டும். அதாவது நீ எங்கள் அருகில் வந்து எங்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல் தேனை எடுத்துக் கொண்டு எங்கள் அடையை கடலில் வீசி எறிந்து விடு. இதைச் செய்தால் உன்னை பெரிய செல்வந்தனாக மாற்றுவோம்,” என்றது.

“”நான் உங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்கமாட்டேன். உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்,” எனக் கூறி தேன் அடைக்கு அருகில் சென்றதும் சுரைக் குடுக்கையில் தேன் தானாக நிரம்பியது. உடன் தேன் அடையை எடுத்து கடலில் வீசினான். அடுத்த நிமிடமே தேனீக்கள் தேவர்களாக மாறினர்.

“”நண்பனே! நீ தினந்தோறும் நாங்கள் வசித்த மரத்தடியில் உன் சுரை குடுக்கை வைத்தால் அது நிறைய தேவாமிர்த தேன் நிரம்பும். அதை அருந்துபவர்கள் எந்த நோயால் அவதியுற்றாலும் அதிலிருந்து நிவாரணம் பெற்று சுகம் பெறுவார்கள். அதனால் நீ மேன்மை அடைவாய்!” எனக் கூறி மறைந்தனர்.

அதன்படி தர்மனும் தினந்தோறும் மரத்திலிருந்து தேனைச் சேகரித்துக் கொண்டு நகரத்தில் பெரிய தனவந்தர்களுக்கு தன் தேவாமிர்த தேனை அளித்து அவர்களை நோயிலிருந்து விடுவித்து சுகம் பெறச் செய்தான். இத்தேனைப் பருகியதால் இளமை தோற்றம் கொண்டனர் பலர். மக்கள் ஆதரவினால் தர்மன் பெரிய செல்வந்தனாக மாறினான்.

தர்மனின் அருகில் வசித்த அவன் இனத்தைச் சேர்ந்த மார்க்கன் என்ற மற்றொரு வேடன் தர்மனின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைக் கொண்டான். நானும் தான் தேன் சேகரித்து வருகிறேன். ஆனால், தர்மன் கொண்டு வரும் தேன் எப்படி தேவாமிர்தமாகிறது. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என சந்தேகம் கொண்டு ஒரு நாள் தர்மன் காட்டிற்கு செல்லும் போது அவன் அறியாமல் மார்க்கனும் அவனைப் பின் தொடர்ந்தான். தர்மன் மரத்தடியில் தேன் சேகரித்துச் செல்வதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு அதுபோல் தேன் எடுத்து தானும் செல்வந்தனாக மாறலாமென்று அவனைப் பேராசை ஆட் கொண்டது.

பொறாமையும், பேராசையும் மார்க்கனை வழித் தவற செய்தது. ஆகவே, யாவரும் அறியாமல் தன் குடுக்கையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக மரத்தடியை அடைந்தான். நற்குணம் கொண்ட தர்மனுக்கு தான் தேவர்கள் அருள் புரிந்தனர். பேராசைப் பிடித்தவர்களுக்கல்ல. அதனால் மார்க்கன் மரத்தடியில் குடுக்கையை வைத்ததும் தேனீக்கள் எங்கிருந்தோ கூட்டமாக வந்து அவனை சூழ்ந்து கொட்டின. வலி தாங்காமல் ஓட்டம் பிடித்தான் மார்க்கன். அப்போதும் அவனை விட்டபாடில்லை.

“”கடவுளே நான் செய்தது தவறு தான் என்னைக் காப்பாற்றுங்கள்!” எனக் கூறினான். தேனீக்கள் மறைந்தன. ஆனால் தேனீக்கள் கொட்டிய வேதனை தாங்காமல் தர்மனின் காலில் விழுந்து பேராசையால் தான் செய்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தன் வேதனையைப் போக்கும்படியும் வேண்டினான்.

நற்குணம் படைத்த தர்மன், “”நண்பா! நீ செய்தத் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோறுகிறாய். கவலைப்படாதே!” என்று ஆறுதல் கூறி தன் தேவாமிர்த தேனைக் கொடுத்து பருகச் செய்தான். அடுத்த நிமிடமே அவன் வேதனை மறைந்தது.

பிறகு அவனுக்கு நல்வழிக் கூறி, “”பிறருக்கு அன்புக் காட்டி உதவி செய்தால் நீ உயர் அடைவாய். இந்த பணப்பை கொண்டு நேர்மையாய் உன் தொழிலை செய்!” என்று அறிவுரைக் கூறினான்.

மார்க்கனும் திருந்தி மக்களிடம் பாராட்டுப் பெற்று மேன்மை அடைந்தான்.


Offline Anu

அழகிய குகை!
« Reply #13 on: August 21, 2012, 01:07:00 PM »

அது ஒரு காலை நேரம். ஆண் நரியும் பெண் நரியும் ஒரு அழகிய குகைக்குள் நுழைந்தன. அந்தக் குகை பெண் நரிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது ஒரு புலியின் குகை. அந்த குகையில் வசிக்கும் புலி காலை நேரமானதும் புறப்பட்டு வெளியே இரை தேடச் சென்று மாலையானதும் அந்த குகைக்கு திரும்பி வரும்.

“”இந்த குகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம இங்கேயே இருந்துடலாமா டியர்?’

“”அய்யோ. இது புலியோட குகை. சாயங்காலம் அது திரும்பி வந்து நம்மை இந்த குகைக்குள்ளே பார்த்துட்டா வம்பா போயிடும்.”

“”ஏதாவது ஒரு யோசனை செய்து அந்தப் புலியை இங்க வராம பண்ணிடலாம்.”

“”சரி, நீயே ஒரு யோசனை சொல்லேன்.”

பெண் நரி யோசித்தது. மாலை நேரமானது. புலி தனது குகையை நோக்கிவந்து கொண்டிருந்தது. இதை பெண் நரி பார்த்துவிட்டது. குகைக்குள் புலியின் கண்களில் படாதவாறு ஆண் நரியிடம் தனது குரலை மாற்றி சத்தம் போட்டுச் சொன்னது.

“”நம்ம பசங்க புலிக்கறி சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசைப்படறாங்க. அதோ ஒரு புலி வருது பாரு. போய் அதை அடிச்சிக் கொண்டு வா.”

இது புலியின் காதில் விழுந்தது. புலி பயந்து போனது. தன்னை இவ்வளவு சாதாரணமாக அடித்துக் கொண்டு வரச் சொல்கிறது. இது நம்மை விட பலமான விநோதமான மிருகமாக இருக்கும் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்ட புலி பயந்து ஓடியது. வழியில் ஒரு குள்ளநரி வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குள்ள நரி அதைத் தடுத்து நிறுத்தி விசாரித்தது.

புலி விஷயத்தைச் சொன்னது.

“”உன்னோட குகையில நரியும் அதுங்க பசங்களும் தான் இருக்கு. இதுக்குப் போய் பயந்துட்டீங்களே.”

புலி இதை நம்பவில்லை.

“”நீ சொல்றதை எப்படி நம்பறது?’

“”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன்கூட வந்து இதை நிரூபிக்கிறேன்.”

“”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னோட வாலை என்னோட வால்லே கட்டிடுவேன். பாதியிலே நீ விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா?’

குள்ளநரி இதற்கு ஒப்புக்கொண்டது. புலி தன் வாலை குள்ளநரியின் வாலுடன் இணைத்து முடிபோட்டது.

இருவரும் குகையை நோக்கி புறப்பட்டு குகையை நெருங்கினர். குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது.

நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது.

“”குள்ள நரியே… நீ எனக்கு ரெண்டு புலிகளைக் கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு போனே. இப்ப ஒரே ஒரு புலியோட வர்றியே. ஒரு புலி எனக்கு போதாதுன்னு தெரியாதா உனக்கு?”

இதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. குள்ளநரியின் வால் புலியின் வாலுடன் கட்டப்பட்டிருந்ததால் குள்ளநரிக்கு பலத்த அடிபட்டு அது இறந்து போனது.

இப்போது வழியில் ஒரு குரங்கு வந்து கொண்டிருந்தது. புலி தலைதெறிக்க ஓடி வருவதைப் பார்த்த குரங்கு அதை தடுத்து நிறுத்தி விசாரித்தது.

புலி விஷயத்தைச் சொன்னது.

“”உன்னோட குகையில நரிதான் இருக்கு. நீ போய் எதுக்கு பயப்படறே?’

குரங்கு சொன்னதை புலி நம்பவில்லை.

“”நீ சொல்றதை எப்படி நம்பறது?”

“”நான் சொல்றது உண்மை. வேணும்னா நான் உன் கூட வந்து இதை நிரூபிக்கட்டுமா?’

“”நீயும் என் கூட வந்தா நீ சொல்றதை நம்புவேன். ஆனா உன்னை என்னோட உடம்புலே கட்டிக்குவேன். பாதியிலே நீ என்னை விட்டுட்டு ஓடிட்டா நான் என்ன பண்றது. சரியா?”

குரங்கு இதற்கு ஒப்புக்கொண்டது.

புலி குரங்கை தன் உடம்புடன் வைத்து கட்டிக் கொண்டு குகையை நோக்கி நடந்தது. இருவரும் குகையை நெருங்கினர்.

குகைக்குள்ளிருந்த நரி இதை கவனித்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்தது.

நரி இப்போது சத்தம் போட்டு கத்தியது.

“”குரங்கே, சொன்ன சொல்லை நீ காப்பாத்த வேணாமா? நீ புலியை எனக்கு காலையிலே கொண்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு இவ்வளவு தாமதமாகக் கொண்டு வர்றியே. எனக்கு பசிக்கும்னு தெரியாதா உனக்கு?’

இதை உண்மை என்று நம்பிய புலி தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. வழியில் சில இடங்களில் கீழே விழுந்து புரண்டது. குரங்கிற்கு பலத்த அடிபட்டது.

இதற்குப் பிறகு புலி அந்த குகைப் பக்கம் வருவதே இல்லை. சமயோஜித புத்தியால் நரி தன் குடும்பத்துடன் சந்தோஷமாக அந்த குகையில் வசிக்கத் தொடங்கியது.


Offline Anu

பொறாமை வேண்டாமே!
« Reply #14 on: August 21, 2012, 01:08:20 PM »

ண்ணையார் வாசு ரொம்ப நல்லவர். அவரிடம் கடன் கேட்டு வந்தவர்களுக்குக் கூட வட்டியில்லாமல் கொடுத்து உதவி வந்தார். அவருடைய நிலங்கள் நன்றாக விளைந்தன. செல்வமும் முறையாகப் பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால்—

அவரது தம்பியும், தம்பி மனைவியும் அருகில் வசித்து வந்தாலும் பண்ணையாரின் ஆதரவில்தான் வாழ்ந்து வந்தனர். பண்ணையார் பிறருக்குக் கொடுத்து உதவுகின்ற செயலை வெறுத்தார். அதனால் சில தில்லுமுல்லு வேலைகளையும் செய்து வந்தார்.

பண்ணையாரின் மகன் சுந்தரம் எட்டாம் வகுப்புப் படித்து வந்தான். ரொம்ப நன்றாக படிப்பான்.

அன்று மாலை—

சுந்தரம் பள்ளியிலிருந்து வந்து தன் தந்தையின் முன் தன் அரையாண்டு மதிப்பெண் பட்டியலை நீட்டினான்.

அதில், எல்லாப் பாடங்களிலும் எண்பதிற்கும் மேலாக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அத்தோடு கணக்கில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். வகுப்பில் முதல் மாணவன் என்றும் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த பண்ணையார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

“”அப்பா! நான் நிறைய மதிப்பெண்கள் வாங்கியதற்குக் கண்ணன் சார் தான் காரயம். ஆனால், அவரது மகள் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். என் வகுப்பாசிரியர் கண்ணன் மிகவும் பணத்துக்கு கஷ்டப்படுகிறார் என்றான்.” உடனே ஆசிரியருக்கு தேவையான பண உதவிகள் செய்ய சென்றார் பண்ணையார். இதனால் ஆத்திரம் கொண்ட தம்பி, “”அண்ணா நான் ஊர் சுற்றி பார்க்க செல்லணும். எனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்!” என்றான்.

உடனே கொடுக்கும்படி கணக்குப் பிள்ளைக்கு கட்டளையிட்டார் பண்ணையார். ஒருவாரம் கழித்து ஊர் சுற்றித் திரும்பிய தம்பியும், தம்பி மனைவியும் குய்யோ முறையோ என வாயில் அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களது வீட்டில் திருடன் புகுந்து எல்லா பொருட்களையும் திருடிச் சென்றிருந்தான்.

“”தம்பி… பிறரை பார்த்து பொறாமைப் படக்கூடாது. பொறாமை எலும்புறுக்கி நோய் போன்றது. நீ பொறாமைபட்டு ஊருக்கு போன… என்ன நடந்தது, பார்த்தியா? இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்றார். மனம் திருந்தினர் தம்பியும், தம்பி மனைவியும்.