Author Topic: உதறபட்ட உணர்வு...  (Read 585 times)

Offline Global Angel

உதறபட்ட உணர்வு...
« on: August 21, 2012, 01:12:37 AM »
என்றோ ஒருநாள்
என்னை நீ பார்ப்பாய்
எதிர்பார்ப்பில் வளர்த்தேன்
என் இனிமையான காதலை
பார்த்தாய் .. பார்த்தாய்
பற்றி கொண்டது பரவசமாய் இதயங்கள்

இடறி விழும் போதெல்லாம்
இதமாய் தாங்குவாய் என்று
இருளிலும் நடை பயின்றேன்
வெளிச்சமாய் நீ வருவாய் என்று
இயற்கையாய் இருந்த ஒளி கூட
ஒழிந்தோடி போனதடா ..
இடறி விழுந்து..
இதயம் காயமானது ...

உன் வார்த்தையில்
உடைந்து போன என் இதயம்
ஒவோன்றாய்
உன் நினைவு சிதறல்களை
பொறுக்கி எடுத்து
ஓட்ட வைத்து
துடிக்கின்றது ....

கருகி போன இதயத்தில்
காதலை தேடி பார்கின்றேன்
சாம்பலாய் அது இன்னும்
உன் பெயர் சொல்லித்தான்
உயிர் வாழ்கிறது ...

உதறபட்ட உணர்வுகளுக்கு
உன் அலட்சியங்களை
சொல்லிப் பார்கின்றேன் ..
உன்னவன் தானே
உருகிவிடு என்கிறது உணர்வு ..

தன்மானத்துக்கு சவால்விடும்
என் காதலுக்கு
நானும் பலி என் மனதும் பலி ...
தினம் உன் நினைவில்
சந்தோசமாய்தான் சாய்கிறேன்
சகதியாய் நீ கழுவி சென்ற போதும்..