நெஞ்சைவிட்டு நீங்கா ஓவியமாய் உன் நினைவுகள்
கொஞ்சகொஞ்சமாய் என்னை கொல்லுதடா
உன் விழிஈர்ப்பு விசைதான் என்னவோ
உன் வழிதேடி எனது இதயம் தொடருதடா
நீ கடந்து செல்லும் பாதையில்
நம் வருங்காலம்
என் கண்முன் நிழலாய் நெஞ்சில் ஓடுதடா
உன்னைக் காணும் ஒருநொடியே
என் வாழ்வின் ஆயுளாய் போதுமடா
விழிகள் இணைத்த நம் இதயங்களை
விதியென்று கூறி விலக்குவது சரிதானோ