Author Topic: ஒருவருக்கு தொடர்ந்து கெட்ட சிந்தனைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம்?  (Read 5322 times)

Offline Global Angel

ஒருவருக்கு தொடர்ந்து தீய எண்ணங்கள் ஏற்படுவது ஏன்? உதாரணமாக ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர் விபத்தில் உயிரிழந்து விடுவாரோ என சிலர் மனதில் பயம் ஏற்படுகிறது? இது எதனால்?

‌பதில்: பொதுவாக மோசமான தசா புக்தி நடக்கும் போது இதுபோன்ற எண்ணங்கள் ஏற்படும். குறிப்பாக 6க்கு உரியவரின் தசாபுக்தி, 6ஆம் இடத்தில் நின்ற கிரகத்தின் தசா புக்தி நடக்கும் போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதற்கடுத்தபடியாக 5ஆம் இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அல்லது 2 பாவ கிரகங்கள் இருந்தாலும், 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் கோச்சாரத்தில் அமரும் போதும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு கெட்ட சிந்தனைகள் ஏற்படும்.

இதுபோன்ற பாதிப்பு உடையவர்கள் தங்களின் ராசி, லக்னம் ஆகியவற்றைக் கொண்டு ராசிநாதன், லக்னாதிபதிக்கு உரிய தெய்வங்களை வழிபாடு செய்து பலன் பெறலாம். மேலும் ஆதரவற்றோர் இல்லங்கள், ஊனமுற்றோர் விடுதிகளுக்கு சென்று சில நாட்கள் அல்லது சில மணி நேரம் சேவை செய்யலாம். இதன் மூலம் எதிர்மறைச் சிந்தனையின் தாக்கம் குறையும்.