Author Topic: பிள்ளைக்கு தகப்பன் கொள்ளி வைக்கும் நிலை ஏற்படுவது எதனால்?  (Read 5568 times)

Offline Global Angel


புத்திர தோஷம் கடுமையாக உள்ளவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும். சமீபத்தில் என்னிடம் வந்த ஜாதகத்தில் சம்பவந்தப்பட்டவருக்கு புத்திர பாக்கியமே இல்லை என்ற நிலை காணப்பட்டது. ஆனால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாக ஜாதகத்தைக் கொண்டு வந்தவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியதில் அந்த ஜாதகர் சமீபத்தில் தனது மகனுக்கு கொள்ளி வைத்ததையும் கூறினார். இதுபோல் குழந்தை பாக்கியம் இல்லாத (புத்திர தோஷம்) ஒருவருக்கு குழந்தை கிடைத்தால், அந்த தகப்பன் தனது காலத்திலேயே அந்த பிள்ளைக்கு கொள்ளி வைக்க நேரிடுகிறது.

சிலருக்கு பிறக்கும் போது புத்திர ஸ்தானம் பலவீனமாகி, புத்திரகாரகன் குருவும் பலவீனமாக இருந்து, புத்திர ஸ்தானத்தில் தீய கோள்கள் அமர்ந்து, அந்த தீய கோளின் திசை வரும் போது பிள்ளைக்கு தகப்பன் கொள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு சிலருக்கு 4வது சுற்று ஏழரைச் சனி நடக்கும். அந்தக் காலகட்டத்தில் மோசமான தசை நடந்தால், அவர் கண் எதிரிலேயே பிள்ளைகள் இறப்பார்கள் என்றும் சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.