Author Topic: ஜாதகத்தில் சூரியன், சனி ஒன்றாக இருந்தால் உடல்நலக்குறைவு ஏற்படுமா?  (Read 5473 times)

Offline Global Angel


ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சனி ஆகிய கிரகங்கங்கள் ஒன்றாக இருந்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உடல்நலக் குறைவு இருந்து கொண்டே இருக்கும் என ஒரு சில கூறுகின்றனர். ஜோதிட விதிப்படி இது ஏற்புடையதா?

பதில்: சூரியன், சனி சேர்க்கை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுப்படையாக கூற முடியாது. உதாரணமாக மேஷம், கடகம் சிம்மம் ஆகிய 3 லக்னத்தில் பிறந்தவருக்கு மட்டும் சனி, சூரியன் சேர்க்கை சிறப்பான பலன்களை அளிக்காது.

மற்ற லக்னத்தாரர்களுக்கு சூரியன், சனி சேர்க்கை பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் சனி, சூரியன் சேர்க்கை இருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு சிறிதளவு டென்ஷன் இருக்கும். இது பொதுவான பலன் ஆகும்.

ஒருவருக்கு மீன ராசியில் சனி, சூரியன் சேர்க்கை இருந்தால் அவர், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள் நடத்தும் அளவு அறிவாளியாக இருப்பார். கனரக இயந்திரங்கள் இயக்கும் அளவுக்கு திறமை பெற்றிருப்பார்.

சூரியன், சனி சேர்க்கையால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. ஆனால் அது எந்த லக்னத்திற்கு, ராசிக்கு உள்ளது என்பதைப் பொறுத்தே பலன் கூற முடியும். அதுமட்டுமின்றி சூரியன், சனி சேர்க்கையை பார்க்கும் கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.