Author Topic: பெற்றோருக்கு பிள்ளை கொள்ளி வைக்க முடியாத நிலை ஏன் ஏற்படுகிறது?  (Read 5361 times)

Offline Global Angel


பெற்றோரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியாதிபதி (5க்கு உரியவர்), புத்திரக்காரகன் குரு ஆகிய இருவரும் 6ஆம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது 8, 12இல் மறைந்திருந்தாலோ அல்லது 8, 12க்கு உரியவரின் தசை நடைபெறும் காலத்தில் 6க்கு உரியவனின் புக்தி நடந்தாலோ பெற்ற பிள்ளைகளால், பெற்றோரின் சிதைக்கு தீ மூட்ட முடியாத நிலை ஏற்படும்.

ஒரு சில பெற்றோருக்கு பல பிள்ளைகள் இருந்தும், சிதைக்கு யாரும் தீ மூட்ட இயலாத சூழல் கூட ஏற்படும். எனவே, அதுபோன்ற கிரக அமைப்பு உள்ளவர்கள், பிள்ளைகளை தொலைதூர பயணம் செல்ல அனுமதிப்பதையும், வெளிமாநிலங்கள், அயல்நாடுகளில் தங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்துவேன்.

பிள்ளை இல்லாதவர்களுக்கு யார் கொள்ளி வைக்கலாம்?

பதில்: அவர் (பிள்ளை இல்லாதவர்) யாரைக் குறிப்பிடுகிறார்களோ அந்த நபர்தான் சம்பந்தப்பட்டவருக்கு கொள்ளி வைக்க வேண்டும். ஒரு சிலர் தன்னுடைய சிதைக்கு நெருப்பு வைக்க வேண்டியது யார் என்று உயில் கூட எழுதி வைத்து விடுவார்கள். அதில் தவறொன்றும் இல்லை.

யாருடைய பெயரையும் இறந்தவர் குறிப்பிடாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் ரத்த சொந்தங்கள் (பெரியப்பா, சித்தப்பா மகன்) அவரது சிதைக்கு தீமூட்டலாம்.