Author Topic: கிறிஸ்தவர், முஸ்லிம்கள் உங்களிடம் ஜாதகம் பார்க்க வந்தது உண்டா?  (Read 5431 times)

Offline Global Angel


ஹிந்து மதத்திற்கு மட்டுமே ஜோதிடம் சொந்தம் என்று யாரும், எங்கும் கூறியதில்லை. அனைத்து மதத்திற்கும் ஜோதிடம் என்பது பொதுவானதாகவே கருதப்படுகிறது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்கள் ஜாதி, மதம் பார்க்காமல் பொதுவான முறையில் அதன் வட்டப்பாதையில் சுழன்று கொண்டே பூமியின் மீது கதிர்வீச்சை செலுத்துகின்றன.

எனவே, அனைத்து மதத்தினருக்கும் ஜோதிடம் பொதுவானது என்பதால் வடஇந்தியாவில் இருந்து மட்டுமின்றி அயல்நாடுகளில் இருந்தும் கூட சிலர் என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். அயல்நாடுகளை பொறுத்தவரை எண் கணிதத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

அலுவலகத்தின் பெயர்களைக் கூட நியூமராலஜி விதியை பின்பற்றி அமைத்துக் கொள்வதையே அயல்நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜோதிடர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகம் என்பதால் ஹிந்துக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பிற மதத்தினரும் ஜோதிடத்தை பின்பற்றுவது உறுதிபடத் தெரிகிறது.