Author Topic: ~ அற்புதமான மனிதர் மார்ட்டின் லூதர் கிங் !! { மறு பதிவு } ~  (Read 5772 times)

Offline MysteRy

அற்புதமான மனிதர் மார்ட்டின் லூதர் கிங் !! { மறு பதிவு }




"வாழ்வு நம் முன்வைக்கும் மகத்தான கேள்வி என்ன தெரியுமா?
இதுவரை நீ அடுத்தவருக்காக என்ன செய்திருக்கிறாய்? "


------- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) மார்ட்டின் லூதர் கிங்

இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகு பாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார் . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில் அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.


தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.

“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும். மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.


அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும். நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”