Author Topic: சோர்வு அழுத்தம் என்பனவற்றைப் போக்க மாதுளைச் சாறு மிகச் சிறந்த பானம்!!!  (Read 2248 times)

Offline Yousuf

அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வு, அழுத்தம் என்பனவற்றைப் போக்க மாதுளைச் சாறு மிகச் சிறந்த பானம் என்று ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சோம்பலாக வேலை செய்து கொண்டிருப்பவர்களை மாதுளைச் சாறு சுறுசுறுப்படையச் செய்கின்றது.

தொண்டர் குழுவொன்றுக்கு மாதுளைச் சாறு அருந்தக் கொடுத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்கள் தினசரி 500 ml மாதுளைச் சாறு அருந்தக் கொடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாதுளைச் சாறு தயாரிக்கும் கம்பனி ஒன்றுதான் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

மாதுளைச் சாறு அருந்திய எல்லோருமே இரண்டு வாரங்களுக்கு முன் இருந்ததை விட உற்சாகம், சுறுசுறுப்பு, என்பன மேலோங்கியவர்களாகவும், பெருமையுடனும் காணப்பட்டனர்.

பிரிட்டனில் தொழிலோடு தொடர்புடைய அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

எடின்பேர்க்கில் உள்ள குயின் மார்க்கிரட் பல்கலைக்கழகத்தில் டொக்டர். எமாத் அல் துஜைலி தலைமையிலான குழுவினரே இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

உடலில் அழுத்தங்களால் ஏற்படும் மிக மோசமான சோர்வை நீக்கி சுறுசுறுப்பை மாதுளைச் சாறு அளிக்கின்றது. உடல் நலனுக்குத் தேவையான இன்னும் பல அம்சங்களும் மாதுளையில் காணப்படுகின்றன.

அவை குறித்த விரிவான ஆய்வுகள் அவசியம் தேவை என்று அவர் கூறினார்.

ஒரு மாத காலம் தினசரி ஒரு போத்தல் மாதுளைச் சாறு அருந்தியவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்புப் படிவுகள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

Offline Global Angel