Author Topic: ~ பிரமிப்பு ஊட்டும் உலக அதிசியம் பிரமிடு பற்றிய தகவல் !!! { மறு பதிவு } ~  (Read 6070 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226452
  • Total likes: 28874
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரமிப்பு ஊட்டும் உலக அதிசியம் பிரமிடு பற்றிய தகவல் !!! { மறு பதிவு }




நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .

கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்குஉள்ளது.

ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.


பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட கூம்பகம் பண்டை கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத் தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.

இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது
மம்மிப்படுத்துதல் பற்றி ...

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

6. உடல் கல் உப்பால் மூடப்படும்.

7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.

9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.