Author Topic: ~ கீரைகளின் பயன்கள் ~  (Read 839 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226321
  • Total likes: 28790
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கீரைகளின் பயன்கள் ~
« on: July 31, 2012, 08:53:43 PM »
கீரைகளின் பயன்கள்



விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கி...ய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

அரைக்கீரை:

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.

மணத்தக்காளி:

வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.

பசளைக்கீரை:

மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

வெந்தியக்கீரை:

வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.

முளைக்கீரை:

எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

அகத்திக்கீரை:

வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை:

வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.

முருங்கை கீரை

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.