Author Topic: ஜாடைக் காட்டு..  (Read 706 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஜாடைக் காட்டு..
« on: July 30, 2012, 10:43:01 PM »
வரியுதட்டின் வண்ணமென்னை மயக்கவில்லை - நீ
வார்த்திட்ட பார்வையால்நான் வளைய வில்லை
தரிக்கெட்டு என்னையுன்னில் தொலைக்க வில்லை - சரி
தவறுபாரா மல்காதல் உரைக்க வில்லை
விரிவான உன்னறிவை வியந்து கண்டேன் - நீ
விளக்குகிற அழகுதனில் விருப்பம் கொண்டேன்
பரிவான உன்மனதை பார்த்த பின்பே - என்
பார்வதியாய் ஆகுவாயோ என்று கேட்டேன்..


உருவத்தை பார்த்துவிட்டா காதல் சொன்னேன் ? - ஒரு
ஊடலுண்ட பின்னாலே உறவு சாய!
பருவத்தின் தகிப்புக்கா காத லுற்றேன் ?- கொஞ்சம்
பருகிவிட்ட பின்னாலே தாகம் தீர!
பெருவாழ்வு வாழுதற்கே காத லித்தேன் - நீ
பொருந்தாது எனச்சொல்லி விலகி விட்டாய்
விருப்பங்கள் எல்லாமும் நடப்ப தில்லை *- என்று
வீண்பேச்சை விட்டிடுவோம் முடித்து விட்டாய்

விறகென்று வேகும்தீ அடுப்பில் என்னை - அடி
விதியென்ற பெயராலே தினித்து விட்டாய்
சிறகுண்டு சிறுவானம் கடக்க எண்ண - துயர்
சிலுவையைசி தைஎன்மேல் சுமத்தி விட்டாய்
பிறகென்ன என்றுகேட்கும் பேதைப் பூவே - என்
பிரியங்கள் உன்பெயரில் மட்டும் ஊறும்
இறபென்ற இருட்டுக்குள் இருந்து கொண்டே- உன்
இமைவீட்டு கதவுடைத்தென் இதயம் சேரும்

முத்தத்தில் நனையாத முகங்கள் இல்லை - உன்
மூச்சுக்குள் மோகங்கள் முடிய வில்லை
சத்தங்கள் நுழையாத செவிகள் இல்லை * ஒரு
சாமத்தில் தனியாதல் தவங்கள் இல்லை
ரத்தத்தில் நனையாத செல்கள் இல்லை - பெரும்
ராத்திரிகள் அறியாத ரகசியம் இல்லை
கொத்துப்பூ உன்வாசம் குறைவதில்லை - நீ
குழ்ந்தைப்போல் எந்தோளில் குழாவும் முல்லை

ஆடையதில் உடல்மறைக்கும் அழக ணங்கே - உன்
ஆசைதனை எதில்மறைத்தாய் எனக்கு கூறு
வாடையிலே வெப்பமின்றி வாட தேகம் - உன்
மார்ப்புச்சூட் டிலென்,உள்ளே வெப்ப மூட்டு
கூடைப்பூ வாயங்க களுற்ற தேனே - உன்
கூச்சைத்தை என்விழிகள் குடிக்க ஊட்டு
ஜாடையொன்றில் உயிவேரை அசைத்த காற்றே - நான்
சாந்தியுற மீண்டுமந்த ஜாடைக் காட்டு
அன்புடன் ஆதி