Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 98691 times)

Offline KS Saravanan

தொடர்வண்டி

Next

முயற்சி இல்லாமல் ஏறும்,
முன்னால் வந்தால் மறையும்,
பின்னால் வந்தால் தொடரும்,
எனை வெல்ல யாராலும் முடியாது...
நான் யார்?

Offline RajKumar

நிழல்

அடுத்த விடுகதை
🪷இளமையில் உயரமாக இருக்கும்... வயது ஆக ஆக உயரம் குறைந்துகொண்டே போகும். இது என்ன? 🪷

Offline Vethanisha

மெழுகுவர்த்தி

கீழே வரும் ஆனால் மேலே போகாது... இது என்ன

Offline RajKumar

மழை



அடுத்த விடுகதை
🪷இதற்கு கைகள் இருக்கும். ஆனால் கை தட்ட முடியாது. இது என்ன? 🪷

Offline Jithika

கடிகாரம்

NEXT 🌹வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?🌹

Offline RajKumar

சிரிப்பூ,



அடுத்த விடுகதை
🪷முதலில் காற்றைக் குடிப்பான், பின்னர்
காற்றிலே பறப் பான்... 🪷

Offline MaiVizhi

பலூன்

அடுத்த விடுகதை

தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
 

Offline RajKumar

தொலைபேசி




அடுத்த விடுகதை
🪷 முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? 🪷

Offline Vethanisha

ஆமை

கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன

Offline Thooriga

பூசணி கொடி


ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?



Offline RajKumar

மூச்சு


அடுத்த விடுகதை
🪷முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்? 🪷

Offline Yazhini

கண்மணி 🤔🤔🤔

Offline Yazhini

அடுத்த புதிர்:
காலில்லாத பந்தலைப் பார்க்க பார்க்க வினோதம். அது என்ன ? 🤔

Offline RajKumar

வானம்


அடுத்த விடுகதை
🪷 அன்றாடம் வீதியில் மலரும்; அனைவரையும் கவரும். அது என்ன?🪷