Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 95555 times)

Offline Jithika

Answer -கத்தரிக்கோல்


NEXT 🌹ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?🌹

Offline Thooriga

Answer - தேன்கூடு

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?

Offline RajKumar

கண் இமை






அடுத்த விடுகதை.  ராகத்துடன் பாடி வருவார், ராத்தூக்கம் கெடுப்பார். யார் இவர்?   

Offline Jithika

Ans-கொசு

Next 🌹உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?🌹

Offline Vethanisha

வெங்காயம்

Aduthu

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி -அவள் யார்?

Offline Jithika

Ans-முட்டை

NEXT 🌹மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?🌹

Offline RajKumar

விழுது




அடுத்த விடுகதை     
🍨  வெள்ளை ராஜாவுக்குக் கருப்புச் சட்டை...🍦

Offline Thooriga

உளுந்து

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?

Offline RajKumar

சைக்கிள்






அடுத்த விடுகதை
🪷 உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? 🪷

Offline Yazhini

தராசு

அடுத்த புதிர்


அம்மா சந்தைக்கு போகும் முன்னே மகள் சந்தைக்கு போய்விடுவாள்
அவை என்ன


விடை: வாழை இலை மற்றும் வாழை குழை
« Last Edit: March 21, 2025, 10:20:32 AM by Yazhini »

Offline KS Saravanan

சூரியன் மற்றும் சந்திரன் 

அடுத்த புதிர்
அச்சு இல்லாத சக்கரம்.. அழகு காட்டும் சக்கரம்..!
இது என்ன ?

Offline RajKumar

வளையல்




அடுத்த விடுகதை.     
🪷 உடம்பெல்லாம் பச்சை புடவை சுற்றியவள்
மூக்குக்கு மட்டும் பவளக்கல் மூக்குத்தி
போட்டவளாம், – அவள் யார்? 🪷

Offline Jithika

கிளி

NEXT 🌹வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?🌹

Offline RajKumar

சோளம்




அடுத்த விடுகதை
🪷 விடிய விடிய பூந்தோட்டம். விடிந்து பார்த்தால்
 வெறுந்தோட்டம். அது என்ன? 🪷

Offline Jithika

நட்சத்திரங்கள்

🌹கண் சிமிட்டும் ஒன்று மணி அடிக்கும் மற்றொன்று:
கண்ணிர் வடிக்கும் இன்னொன்று.🌹