Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 80638 times)

Offline Evil

விடை: தபால் பெட்டி

அடுத்து,
ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
-முட்டை

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

Offline Natchathira

கல்வி

நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
அச்சு வெல்லம்

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? 

Offline TiNu

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? ---> கத்திரிக்காய்


Next: பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும்,
தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
 - முருங்கைமரம்

 அடுத்து-கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

Offline Ninja

விடை : புகை
அடுத்து -
ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4583
  • Total likes: 5308
  • Total likes: 5308
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
கொடி

 அடுத்து -அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு?


Offline ANJANA

முட்டை

பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?

Offline Madhurangi

பெட்ரோல்

வழியெல்லாம் கூடவே வருவான்; வீட்டுக்குள் மட்டும் வரமாட்டான். அவன் யார்?

Offline Ishaa

காலணிகள்

ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?

Offline VenMaThI



தேன்கூடு


யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?


Offline Ishaa

வாழை மரம்

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?

Offline Nivrutha

கடிகாரம்

அடுத்து..

தோலை உரித்தால் அழ மாட்டான். தோல் உரித்தவனை அழ வைப்பான்.அவன் யார்??
« Last Edit: August 09, 2023, 03:06:32 PM by Nivrutha »

Offline Ishaa

வெங்காயம்

கடிகாரம் - தப்பு

ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
« Last Edit: August 10, 2023, 02:16:54 AM by Ishaa »