மலரும் பூவாய் மலரட்டும்
நாளைய பொழுது
வாசம் வீசும் மல்லிகையாய்
தவழட்டும் ஒரு புன்னகை
பூரிப்புகள் தவழட்டும் மனதில்
அனுபவங்கள் புதிதானால்
சரித்திரமும் புதிதாய் படைக்கலாம்
இலக்குகள் தெளிவாக இருந்தால்
பூரணத்துவம் ஆகலாம்
நிதமும் பூத்திடும் முயற்சிகள்
நீவிடும் பூபாளமாய்
பொழுதுகள் மலர்ந்தால்
நாளைய பொழுதை
நாம் ஆளலாம்
எட்டுத்திக்கிலும்
வெற்றிக் கொடி நாட்டலாம்
கோள்களை வசப்படுத்தி
வானையும் தொட்டு வரலாம்
நம்பிக்கை மனதில் இருந்தால்
வெற்றிகள் தூரமில்லை
முயற்சியில் உறுதியாய் இருந்தால்
தோல்விகள் இல்லை வாழ்வில்
வாழ்வதற்குத்தான் இந்த வாழ்க்கை
துவண்டு போனால்
அலையடித்து ஓயும்
துயரங்கள் கண்டு...
வெற்றிப்படிகள் ஏறி
விண்ணை தொட
முடியாது நண்பா