Author Topic: ~ மிதவை நகரம் வெனிஸ் பற்றிய தகவல் !!! ~  (Read 5816 times)

Online MysteRy

மிதவை நகரம் வெனிஸ் பற்றிய தகவல் !!!




வெனிஸ் நகரம், இத்தாலி நாட்டில் அமைந்துள்ள அழகிய நகரம் ஆகும். இது இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. வெனிஸ் உலகத்திலுள்ள அழகிய நகரங்களில் ஒன்று. இந்த நகரத்திற்கு வருடந்தோறும் ௦ 50000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்

வெனிஸ் அதன் அழகிய தேவாலயங்களுக்கு பெர்யர் பெற்றது. வெனிஸ் நகரம் அதன் படகு போக்குவரதுக்கு பெயர் பெற்றது. படகு போக்குவரத்து இந்த நகரத்தின் போக்குவரத்து அமைப்பாக உள்ளது.

வெனிஸ் நகரத்தின் கட்டிடங்கள் அனித்தும் பெரும்பாலும் மரக்கட்டைகள் மூலம் கட்டப்பட்டுள்ளன. இவை நீண்ட நாட்கள் நீரில் மூழ்கி இருந்தாலும் வலிமையாக இருக்கும் வல்லமை படித்தவை. அதனால்தான் நூற்றாண்டுகள் தாண்டியும் இந்நகரின் கட்டிடங்கள் அனைத்தும் மிக உறுதியாக உள்ளன.

வெனிஸ் நகர வீதிகள் அதன் அழகிய அமைப்புக்காக பெயர் பெற்றது, குறிப்பாக நகருக்கு இடையே கட்டப்பட்டுள்ள சிறு, சிறு பாலங்கள் மிக அழகாக தோற்றம் அளிக்கிறது.