Author Topic: ~ கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய லிச்சி பழம் !!!! ~  (Read 637 times)

Offline MysteRy

கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய லிச்சி பழம் !!





லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம், இருந்தாலும் பெரிய பழக்கடைகளில் இந்த சத்தான பழம் கிடைக்கிறது. சீனாவை பூர்விகமாகக் கொண்ட இந்தப்பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது. 'லிச்சிப் பழத்தில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்தபகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி., நீலத்தில் கொட்டை இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பளத்திள் கொழுகொழு சதைப்பகுதிதான், சத்துகளின் இருப்பிடம்.

இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் தோல், எலும்புக்கு நல்லது. கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. அதிக கலோரி இல்லாதது என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்களைப் போக்குகிறது.

இதில் உள்ள நியாசிந், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். கோடை காலத்தில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. வாங்கிபயன் அடைவோம்.