Author Topic: வந்துவிடு ....  (Read 535 times)

Offline Global Angel

வந்துவிடு ....
« on: July 28, 2012, 10:10:37 PM »
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயரில் கலந்த உறவே ....
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்
கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்துவிடு ....
கனவாய் போன
காதல் உறவின்
கதைகள் சொல்ல வந்துவிடு ....
உன்னை காண ஏங்கும்
கண்கள் அதற்க்கு
கண நேர சுகத்தை தந்துவிடு ..