Author Topic: ~ இளம் வயதில் நரை முடியே தவிர்க்க சில தகவல் !!! ~  (Read 937 times)

Online MysteRy

இளம் வயதில் நரை முடியே தவிர்க்க சில தகவல் !!!




இளம் வயது உள்ளவர்களுக்கு நரை முடி இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல ! எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

* நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

* தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

* முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

* முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும் . சரி நரை முடி என்று சொன்ன உடன் என்னக்கு பிடித்து சில வரிகள் நியபகதிர்க்கு வந்தது கிழே


"இயற்கையிடம் போராடி ...தோற்று ...
ஒவொரு மனிதனும் கடைசியில் காட்டும் ...
சமாதான கொடி... இந்த நரை முடி தான் "......