Author Topic: இரண்டாவது திருமணம் செய்யும் போது மனப் பொருத்தம் முக்கியமா? ஜாதகம் முக்கியமா?  (Read 5487 times)

Offline Global Angel

பொதுவாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தாலும், 2வது திருமணம் செய்யும் போது மனப்பொருத்தம் மட்டுமல்லாது, ஜாதகப் பொருத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில ஜாதகங்களுக்கு எத்தனை தாரம் வந்தாலும் தங்காத நிலை காணப்படும் என்பதால் இதனைக் கூறுகிறேன்.

கடந்த வாரத்தில் என்னிடம் வந்த ஜாதகருக்கு 4 திருமணம் முடிந்து விட்டது. தற்போது 5வது முறையாக அவருக்கு திருமணம் முடிக்கலாமா என்று கேட்க அவரது பெற்றோரும், அவரும் என்னிடம் வந்திருந்தனர்.

அவரது தந்தை கூறுகையில், “முதல் திருமணத்தின் போதுதான் பொருத்தம் பார்த்தோம். அதற்குப் பின்னர் நடத்திய திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை. மனம் ஒத்துப் போனதால் திருமணம் நடத்தினோம். ஆனால் அவையும் நிலைக்கவில்லை” என்று கவலைப்பட்டார்.

இந்த ஜாதகரைப் பொறுத்தவரை முதல் திருமணம் பொருத்தம் பார்த்து செய்தாலும், அது தோல்வியில் முடிந்ததால் ஜாதகப் பொருத்தம் மீதான மதிப்பு, நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் இழந்து விட்டனர். அதனால் அடுத்தடுத்த திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்கவில்லை. ஆனால் இது தவறான முடிவாகும்.

இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். பொதுவாக மறுமணம் என்றாலே கிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்களின் சதவீதம் குறையும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

2வது திருமணம் செய்யும் போது வரன்களின் தசா புக்தியை பார்ப்பது அவசியம். மேலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபருக்கு குழந்தை உள்ளதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில் குழந்தையின் ராசிக்கும், வரக்கூடிய பெண்ணின் ராசிக்கும் முரண்பாடு/பகை இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு பொருத்தம் பார்த்து 2வது திருமணத்தை நடத்த வேண்டும்.