Author Topic: எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை பற்றிக் கூறுங்கள்?  (Read 5630 times)

Offline Global Angel


சில குறிப்பிட்ட கைரேகை அமைப்பைப் பெற்றவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என சில கைரேகை தொடர்பான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி விளக்குங்கள்?

பதில்: எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது. அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு “குரு மேடு” என்று அழைக்கப்படுகிறது.

குரு மேட்டில் நேர் ரேகைகள் (ஒன்றுக்கு மேற்பட்ட) இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் முக்காலத்தையும் உணரக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.

இதேபோல் உள் செவ்வாய் மேடு மற்றும் சந்திர மேடு ஆகியவை முடிவடையும் இடத்தில் நட்சத்திரக் குறியீடு அல்லது நாற்கரக் குறியீடு இருந்தாலும் அவர்களுக்கு எதிர்காலத்தை அறியும் சக்தி இருக்கும்.