Author Topic: காதல் பரிசு  (Read 513 times)

Offline Global Angel

காதல் பரிசு
« on: July 27, 2012, 05:15:06 PM »
அங்கம் உரச
அணுவும் தீ பற்ற
அணு அணுவாய் ஆகிரமித்தாய்
அழகாய் அன்றலர்ந்த தாமரையாய்
உன் கையில் அவள் ...
உன் வேட்கை தீக்கங்குகள்
விரகமாய் பற்றி கொள்ள
விரசமாய் விரகமாய்
உன் தீண்டல் எல்லை மீறி
சுகத்தின் எல்லையை தேட
மோகத் தீயில் முழுவதுமாய் அவள்
முனகலோடு உன்னை அழைக்க
முழுவதுமாய் ஒன்றிவிட்டாய்..
உன்னை நேசிக்கும் ஓர் இதயம்
ஓரமாய் உக்கார்ந்து
உலகமே அழிவதாய்
ஒப்பாரி வைப்பது தெரிந்தும் புறக்கணித்து ...நீ தொடர
தனக்கே சொந்தமான ஒன்று
தன் கண் முன்னே கலைவது கண்டு
தன் இயலாமை எண்ணி
கண் மடல் வழி வழிந்த உப்பு துளிகள்
உறக்கத்தை கலைத்தபோது
தெரிந்து கொண்டேன்
கண்டது கனவென்று ..
கனவில் கூட என்னை கண் கலங்க வைக்கும்
உன் கல்நெஞ்சு
காலத்துக்கும் எனக்கு பரிசு
காதல் பரிசு ..