Author Topic: ~ தண்ணீர் அருந்துகள் ~  (Read 748 times)

Offline MysteRy

~ தண்ணீர் அருந்துகள் ~
« on: July 25, 2012, 04:18:54 PM »
தண்ணீர் அருந்துகள்




தண்ணீர் அருந்துகள் என எல்லோர் வீட்டிலும் தண்ணீர் பற்றி சொல்கின்ற சத்தம் கேட்டுகொண்டு தான் இருக்கிறது.இதில் நீங்களும் தண்ணீர் அருந்துங்கள் என சொல்கின்றீர்களேன்னு கேட்குறீங்ளா.ஆமாங்க தண்ணீர் சிறந்த மருந்து.தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பு 4*160 மி.லி குயைறாமல் தண்ணீர் பருக வேண்டும்.


சாப்பிட்டு முடித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீரில் என்ன சத்து உள்ளது என நீங்கள் நினைக்க தோன்றும்.ஒரு கிரைண்டரில் அரிசியை கோடடு போதுமான அளவு தண்ணீர் ஊற்றாமல் விட்டால் அது எப்படி மாவாக மாறும் அதுபோல தான் போதிய அளவு தண்ணீர் உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர்.நமது வளர்ச்சிக்கு தண்ணீர் இன்றிமையாகாத பங்கு வகிக்கின்றது.


இரவு நேரங்களில் அதிகளவு தண்ணீர் உட்கொள்ள கூடாது.... இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது.உடற் பயிற்சியில் ஈடுபடும் போது தண்ணீர் குடிப்பது அறிவியல் முறையில் ஆராய வேண்டும்.இது பற்றி டாக்டர் சோ போ கருத்து கொண்டுள்ளார். அவருடைய கருத்தை கேளுங்கள்.


உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும். தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது. ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும். பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை என்றார் அவர்.


ஆகவே உடற் பயிற்சி செய்த பின் சரியான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிமுறை என்ன என்றால் முதலில் தண்ணீர் வாய்க்குள்ளே ஈரம் செய்ய வேண்டும். பின் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.