Author Topic: ~ ஜென் தத்துவக்கதைகள் ~  (Read 6947 times)

Offline MysteRy

ஜென் தத்துவக்கதைகள்



“ஜென்” பற்றி அறிந்துகொள்ள அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். அப்பொழுது குரு அவரை உபசரித்து அறிஞரிடம் கோப்பையைக் கொடுத்து, குரு அதில் தேநீரை ஊற்றினார்.


கோப்பை நிரம்பி வழியும் பொழுதும் குரு நிறுத்தவில்லை. அறிஞர், “கோப்பை நிறைந்து விட்டது. இதற்கு மேல் கொள்ளாது” என்று கூறினார். குருவும் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, “உங்கள் மனதில் வாதப் பிரதி வாதங்களும் தத்துவக் குப்பைகளும் நிரம்பியிருக்கின்றன. உங்கள் கோப்பை காலியாக இருந்தால்தான் ஜென் பற்றிய உணர்வு பெற முடியும்?” என்று கூறினார்.


அறிதலற்ற நிலையிலிருந்தால் அறியலாம்: நிறையச் செய்திகளைக் கற்றும் கேட்டும் அறிந்து மூளையில் நிறைத்து வைத்திருக்கும் அறிவாளிகளை ஜென் பொருட்படுத்துவதே இல்லை.


நிறையச் செய்திகளை அறிந்து கொண்டு சுமந்துகொண்டு அலையாமல் இருத்தலே நல்லது என்கிறது ஜென்.
« Last Edit: July 25, 2012, 02:01:22 PM by MysteRy »

Offline MysteRy

~ ஜென் தத்துவக்கதைகள் 2 ~
« Reply #1 on: July 25, 2012, 01:54:33 PM »
ஜென் தத்துவக்கதைகள் 2



ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர்.அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள்.


குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார்.


கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறி விடுவோம் என்று கூறினர்.குரு அவர்களைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''நீங்கள் அனைவரும் வெளியே போவதாக இருந்தாலும் ,நான் அவனை வெளியே அனுப்ப முடியாது.''சீடர்கள், குரு தவறு செய்தவனுக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்புக் கொடுக்கிறார் என்று புரியாமல் விழித்தனர்.


குரு மீண்டும் அவர்களிடம் பேசினார்,''உங்கள் அனைவருக்கும் உலகில் நல்லது எது,கெட்டது எது என்பது நன்றாகத் தெரிகிறது எனவே நீங்கள் வெளிய சென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் இவனுக்கு சரியான செயல் எது,தவறான செயல் எது என்பது இன்னும் தெரியவில்லை.இவனுக்கு நான் உதவாவிட்டால் வேறு யார் உதவுவார்கள்?அவனுக்கு நல்லது  எது,கெட்டது எது என்று நான் தான்  சொல்லித்தர வேண்டும்.


எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.''என்றார்.சீடர்கள் கண்களில் கண்ணீர் வழிய குருவிடம் மன்னிப்புக் கேட்டனர்.
« Last Edit: July 25, 2012, 02:01:49 PM by MysteRy »

Offline MysteRy

உயிருள்ள புத்தர் ஜென் கதைகள் 3



கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.


அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.


மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே”என்று கோபத்தில் கதறினார்.


உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?”கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.


 அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?”என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ”மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?’

Offline MysteRy

~ ஜென் தத்துவக்கதைகள் 4 ~
« Reply #3 on: July 25, 2012, 02:03:41 PM »
ஜென் தத்துவக்கதைகள் 4



ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும்  சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.


ஆர்வத்துடன்  குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,”பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை  வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.”

Offline MysteRy

~ ஜென் தத்துவக்கதைகள் 5 ~
« Reply #4 on: July 25, 2012, 02:05:39 PM »
ஜென் தத்துவக்கதைகள் 5



மாணவன் ஒருவன் வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்குப் பயணப்பட்டான். பயணத்தில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றில் வெள்ளம் சுழித்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் அக்கறையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டான் மாணவன், “ஐயா... நான் ஆற்றின் அக்கரைக்கு வருவது எப்படி?’’
குரு சத்தமாகச் சொன்னார்.. மகனே... நீ ஆற்றின் அக்கறையில்தான் இருக்கிறாய்...


விழித்திறன் அற்ற ஒருவன் தன்னுடைய நண்பனைப் பார்க்க பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். பேசிக் கொண்டே இருந்தார்கள். மாலை வரை பேசிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் துவங்கியது. நண்பன் தன்னுடைய விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
“இருட்டி விட்டது. இதற்கு மேல் எங்கே போகிறாய்? காலையில் போய்க் கொள்ளலாம் என்றான்.


எனக்குப் பகல் இரவு எல்லாம் ஒன்றுதான். ஒளி என்ன, இருள் என்ன இரண்டும் ஒன்றுதான்   கவலைப்பட வேண்டாம் என்றான் நண்பன்.
எதற்கும் இதை நீ எடுத்துக் கொண்டு போ என்று ஒரு லாந்தர் விளக்கை நண்பனிடம் கொடுத்தான்.


இது எனக்கு எந்த வகையில் பயன்படும்? நான் போய்க் கொள்கிறேன் என்றான்.
உனக்குப் பயன்படவில்லை என்றாலும் இருட்டில் பார்வை உள்ளவர்கள் உன்மீது மோதிக் கொள்ள மாட்டார்கள் இல்லையா? அதற்காக எடுத்துக் கொண்டுபோ என்று வலியக் கொடுத்து அனுப்பினான் நண்பன்.


லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு காட்டு வழியே பார்வையற்றவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்து குரல் கேட்டது..
ஐயா எங்கே போகிறீர்கள்? கையில் விளக்கு இருக்கிறதே... உனக்கும் தெரியவில்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பார்வையற்றவன்.
லாந்தரில் பொருத்தப்பட்ட மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது சகோதரனே... என்றான் பின் தொடர்ந்து வந்த அந்த வழிப்போக்கன்.

Offline MysteRy

~ ஜென் தத்துவக்கதைகள் 6 ~
« Reply #5 on: July 25, 2012, 02:08:26 PM »
ஜென் தத்துவக்கதைகள் 6



அப்படியா?


ஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு
பெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத்திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர்.


"அப்படியா?" என்றார் ஹகுயின்.


குழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்
பெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.


ஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.


தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.
ஹகுயின் கூறினார்: "அப்படியா?"

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: ~ ஜென் தத்துவக்கதைகள் ~
« Reply #6 on: August 27, 2012, 03:50:24 PM »
நல்ல பணி மிஸ்ட்ரி, எநக்கு பிடித்த தத்துவங்களில் ஜென் முதன்மையானது

நேரம் கிடைக்கும் போது இந்த கதைகளில் ஒளிந்திருக்கும் நவரத்தினனக்களை தோண்ட முய்ற்சிக்கிறேன், வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி

Offline MysteRy

Re: ~ ஜென் தத்துவக்கதைகள் ~
« Reply #7 on: August 27, 2012, 04:31:41 PM »

« Last Edit: August 30, 2012, 01:54:06 PM by MysteRy »