Author Topic: ~ தொட்டற்சினுங்கி பற்றி தெரிந்த மருத்துவ பயன்கள் !!! ~  (Read 778 times)

Offline MysteRy

தொட்டற்சினுங்கி பற்றி தெரிந்த மருத்துவ பயன்கள் !!!




இதோட தாவரவியல் பேரு, மிமோசா புடிகா. இது இந்தியாவில் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகள்ல காணப்படுது.

இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதோட சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம்.

இதைத் தொட்டால் அவை மூடிக் கொள்ளும். அதனால் தான் இதுக்கு தொட்டாற்சிணுங்கி'ன்னு பேரு வந்துடுச்சு. இதோட மலர்கள் பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கனிகள் தட்டையாக இருக்கும். இதோட இலைகள் மற்றும் வேர் மருந்தாகப் பயன்படுது.

இலைகளின் சாறு சைனஸ், மூல நோய், காயங்களுக்கு மருந்தாகுது. இதோட வேர் சிறுநீரக கோளாறுகளைப் போக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுது. இதில் இருந்து நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுது.