"FTC யின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கவிதைகள்"
அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிசய அறிவிப்பு இது
அதன் சாரம் அப்பழுக்கற்ற உண்மை என்பதனால்
அதிர்ச்சியின் அதிர்வலைகள், அடங்கிட அவகாசம் ஆனது
அத்தனை எளிதில் எதிலும் லயிக்காத என் மனமே
அழுந்திட ஆழமாய் பதிந்துள்ளது எனும்போது
அதன் அற்புதமும் ,அழகையும், ஆனந்தத்தையும்
அளவிட்டு அறிவிப்பது அவசியமற்றதே !
அரட்டையறைக்கு அவ்வளவாய் அறிமுகமற்றவன்
அதனால்,அதைப்பற்றி அளவளாவவில்லை
அறிமுகமான அன்றிலிருந்து, இதோ இன்றுவரை
அரும்மன்றம் அதில் அமர்ந்திருக்க தவறியதில்லை என்றும்
அழகான இந்த முதலாமாண்டு முடிவே ,
அளவிற்க்கெல்லாம் அப்பாற்பட்டு, பல்லாண்டுகாலம்
அற்புதமாய் தொடர்ந்திட, அகமலர்ந்த வாழ்த்துக்கள் !