Author Topic: வெள்ளைக் கொண்டைக் கடலை வடை (வடக்கத்திய ஸ்பெஷல்)  (Read 1282 times)

Offline kanmani


என்னென்ன தேவை?

கொண்டைக் கடலை - 2 கப், காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் (விரும்பினால்) - 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய மல்லித் தழை - சிறிது, கரம் மசாலா - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள், கரம் மசாலா, தேங்காய், கொண்டைக் கடலை சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலந்து, வடைகளாகத் தட்டிப் பொரித்து எடுக்கவும்.